இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

திங்கள், 3 அக்டோபர், 2011

“ராஒன்” படத்தில் ரஜினி நடித்தது மகிழ்ச்சியான விஷயம். ஒரே பிரேமில் இரண்டு சூப்பர் ஸ்டார்...!!!!


“ரா ஓன்” இந்தி படத்தில்
ஷாருக்கானுடன் நடித்த  ரஜினி;
மும்பையில் படமாக்கப்பட்டது
ஷாருக்கானுடன் “ரா ஒன்” இந்திப் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. வில்லன்களிடம் நிராயுதபாணியாக சிக்கும் ஷாருக்கானை ரஜினி திடீரென வந்து காப்பாற்றுவது போல் அக்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் ரஜினி நடிப்பாரா? மாட்டாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
 
தீபாவளிக்கு இப் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ரஜினி நடிக்காவிட்டால் என்ன செய்வது என்று குழம்பிய படக்குழுவினர் ரஜினி போன்ற தோற்றம் உடைய “டூப்” ஒருவரை வைத்து அக்காட்சியை எடுத்து விட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி திடீரென மும்பை சென்று “ராஒன்” படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து கொடுத்து விட்டு திரும்பியுள்ளார். காந்தி ஜெயந்தியன்று ரஜினி நடித்த காட்சியை படமாக்கியுள்ளனர்.
 
 இந்த தகவலை ஷாருக்கான் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, ரஜினி சார் செட்டுக்குள் நடந்து வந்ததை என்னால் மறக்கவே முடியாது. எங்கள் கனவை நனவாக்கிய சவுந்தர்யாவுக்கு நன்றி. “ராஒன்” நிறைவடைந்துள்ளது. ரஜினி சார் அதை ஆசிர்வதித்தார். என்ன சொல்வது என் கண்ணில் ஆனந்த கண்ணீர். அவர் எப்போதும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
 
மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பாளர் சுபாஷ் கையின் “விஷ்லிங் உட்ஸ்” ஸ்டூடியோவில் இக்காட்சியை எடுத்துள்ளனர். “ராஒன்” படத்தில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றும் ரசூல்பூக் குட்டி கூறும்போது, “ராஒன்” படத்தில் ரஜினி நடித்தது மகிழ்ச்சியான விஷயம். ஒரே பிரேமில் இரண்டு சூப்பர் ஸ்டார் என்பது சாதாரண விஷயமல்ல. ஷாருக் மேல் உள்ள மதிப்புக்கும் அழைப்புக்கும் கட்டுப்பட்டுதான் ரஜினி இதில் நடித்துள்ளார்” என்றார்.




என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

0 கருத்துகள்: