காற்றிலே ஒரு கடிதம்
காலேஜ் போகின்ற காலத்துல, நானும் நம்ம நண்பர்களும் ஒரு மைதானத்துல கிரிக்கட் ஆடுரது வழக்கம். அந்த மைதானம் பாதையோரத்தில் இருந்தால் கிரிக்கட் விளையாடுவது போக, ரோட்டுல போகும் வரும் பிகர்களை சைட் அடிக்கும் வசதியும் இருந்ததால் நம் மைதானத்துல எப்போதுமே கூட்டம் கலைகட்டும்...
ஒரு நாள் வழமை போல நாள் விளையாட்டிக் கொண்டிருக்கும் போது, ஒரே கூத்தும் கும்மாளமுமாக ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. பார்க்கும் போதே சுற்றுலா சென்றுகொண்டிருக்கும் மாணவிகளின் வண்டி என்பது புரிஞ்சிடுச்சு.
நாமளும் விளையாட்டை நிறுத்தி விட்டு ஜொள்ளு வடிய வண்டியை பெப்பெரப்பே`னு பார்த்துடு இருக்க, வண்டியிலிருந்து வந்த ஒரு காகிதத்துண்டு நண்பன் மொக்கராசு காலடியில் வந்து விழ, நண்பன் முகத்தில் ஜொள்ளு இரு மடங்காக கரை புரண்டு ஓடியது.
நம்மளுக்கோ கடுப்பு தாங்கமுடியல.... இவ்ளோ பேர் இருக்கோம். அவன் கிட்டவா விழனும்.. ச்சே!!!
"மச்சி.... ஒரு வேளை அந்த லெட்டர் எனக்குதான்யா வந்திருக்கும்....`னு நண்பன் லொடுக்கு பாண்டி சொல்ல நம்மளையெல்லாம் ரொம்ப கேவலமா ஒரு லுக்கு விட்ட மொக்கராசு
"டேய்!!! நாம் தூரத்துல இருந்து வரும் போதே பாத்துடுதான்யா இருக்கேன்.. (இப்போதான்யா புரியுது, இவன் ஏன் எல்லா பந்தையும் கோட்டை விட்டிருக்கான்`னு...?) நிச்சயமா இது எனக்கு வந்துதாண்டா.."னு மொக்கராசு சொல்ல..
"மச்சி அந்த பொண்ணுக்கு மாறுகண்ணா "ஆ இருக்குமோ.. ன்னு நாம கடுப்பேத்த, மறுபடியும் அதே கேவலமான லுக்`அ விட்டுடு, லெட்டரை திறக்க ஆரம்பித்தான்..
நம்மளுக்கெல்லாம் "Address இருக்குமோ Phone No. இருக்குமோ "ஒரே தவிப்போ தவிப்பு... போயும் போயும் இவன் (மொக்கராசு ) கைல சிக்கிடுச்சே`னு கடுப்போ கடுப்பு...
லெட்டரை திறந்த மொக்கராசு முகமோ நாம் எதிர் பார்த்ததிற்கு மாற்றமாக "சோத்தாலையும் அடி வாங்கி சேத்தாலையும் அடி வாங்கி"ன மாதிரி ஆயிடுச்சு.
ஆமா.. அதுல அப்படி என்னதான் எழுதி இருந்துச்சு`னு பார்த்தா...
........................................................
........................................................
........................................................
........................................................
........................................................
"டேய்! தெருப்பொருக்கி நாயே!!!!
ரோட்டுல கிடக்குரதெல்லாம் பொருக்கி வாசிக்கிரியே!!!!
வெக்கமாயில்ல.......
வீட்டுல சோறா திண்ணுர இல்ல ****** திண்ணுர???
காவாலிப் பயலே "
(முதல்ல தெருப்பொருக்கி நாய்`னு பின்னாடி காவாலி`னு திட்டியிருக்காங்களே!!! லாஜிக் இடிக்குதே`னு தோன்றினாலும், அதை கேட்டா, நம்மள அடிப்பானுங்களே`னு சைலண்ட் மொட்`லயே விட்டுட்டேன் ..)
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக