
பணி செய்யும் இடத்தில் பெண்கள் ஆண்களால் கேலி, கிண்டல் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. இதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. அதிகமாக இரு பொருட் சொற்கள், கொச்சை வார்த்தைகள் பேசுவது வாடிக்கையாக இருக்கிறது. மெக்சிகோ மாகாணத்திலும் இதுபோன்ற இடையூறுகள் பெண்களுக்கு இருந்து வந்தது.
நீ காதலிக்கும் ஆள் அந்த விஷயத்தில் எப்படி? அவர் என்னை விட எடுப்பானவரா? தாய்மை அடைவதன் தொடக்கம் என்னவென்று தெரியுமா? என்றெல்லாம் பேசுகிறார்களாம். இது போன்ற பேச்சுகளால் பெண்கள் ரொம்பவே மனதொடிந்து போனார்களாம்.
கடந்த பெண்கள் தினத்தன்று இந்த விஷயம் பெண்கள் அமைப்பால் பெரிய பிரச்சினையாக எழுப்பப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து ஆய்வு செய்த மெக்சிகோ அரசாங்கம் `இப்படி எல்லாம் பேசக்கூடாது' என்று கூறிவிட்டு, `எப்படி பேச வேண்டும்?' என்பதற்கு இலக்கணமாக ஒரு நூலையும் வெளியிட்டது.
அதில் எப்படி பேச வேண்டும், எப்படி பேசக்கூடாது என்பதெல்லாம் அதில் விளக்கப்பட்டுள்ளது. தப்பாக பேசினால் எவ்வளவு தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எப்படியோ, கிளுகிளுப்பு பேச்சுகள் குறைந்தால் சரிதான்!
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக