இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 28 செப்டம்பர், 2011

எழிய முறையில் ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?


இந்த பதிவில் நமது கணினியில் இருக்கும் வீடியோக்களை அல்லது யூடியூப் (Youtube) வீடியோக்களை நமது பதிவில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

தற்போது வீடியோக்களை பதிவில் இணைக்கும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.

முதலில் உங்கள் ப்ளாக்கர் தளத்தின் புதிய பதிவிடும் (New Post) பக்கத்திற்கு செல்லுங்கள்.

அங்கு Insert a Video என்ற பட்டன் இருக்கும்(படத்தை பார்க்கவும்). அதனை க்ளிக் செய்யுங்கள்.

(
படங்களை பெரிதாக காண, படங்கள் மீது க்ளிக் செய்யவும்.)



க்ளிக் செய்த பிறகு வரும் Window-ல் மூன்று Options வரும்.

1. Upload

2. From YouTube

3. My YouTube Videos


1. Upload

உங்கள் கணினியில் உள்ள வீடியோக்களை இணைக்க இடது புறம் உள்ள Upload என்பதை தேர்வு செய்து, Browse என்பதை க்ளிக் செய்து, உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Upload பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் வீடியோ Upload ஆகத் தொடங்கும். உங்கள் வீடியோவின் கொள்ளளவை(Memory)  பொறுத்து பதிவேற்றம் ஆக நேரம் ஆகும்.

2. From YouTube


யூட்யூப் வீடியோக்களை பதிவில் இணைக்க இரண்டாவதாக இருக்கும் From YouTube என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பிறகு வரும் தேடுபொறியில் குறிச்சொற்களை இட்டு Search Videos என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் இட்ட குறிச்சொற்கள் தொடர்பான பல்வேறு Youtube வீடியோக்களை அது காட்டும். உங்களுக்கு விருப்பமான வீடியோவை க்ளிக் செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.

 3. My YouTube Videos


மூன்றாவதாக உள்ள My YouTube Videos என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் யூட்யூப் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களின் தொகுப்பை காட்டும். உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வு செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.


யூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2:

நாம் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்களை வலைப்பதிவுகளில் இணைப்பதற்கான வசதியை அந்த தளமே தருகிறது.  நீங்கள் யூட்யூபில் பார்க்கும் வீடியோவுக்கு கீழே Embed என்ற பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் அந்த வீடியோவிற்கான Code உருவாகும். அதனை Copy செய்து நமது ப்ளாக்கில் Paste செய்ய வேண்டும். அந்த வீடியோ நமது ப்ளாக்கில் தெரியும்.

  அருமையான கால்பந்து விளையாட்டின் funny வீடியோ இதையும் பாருங்க..


**வீடியோவின் அளவை மாற்ற அந்த Code-ல் உள்ள Width, Height என்ற இடத்தில் நமக்கு தேவையான அளவை மாற்றிக் கொள்ளலாம்.

*Width - அகலம்

*Height - உயரம்



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

roma arumaiyan vijayam nantri nanpaa..!!!