இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 28 செப்டம்பர், 2011

மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் ஈமெயில் அனுப்புவது எப்படி?


மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் ஈமெயில் அனுப்ப  அனானிமஸ் ஈமெயில் பயன்படுத்தபடுகிறது...


இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம். இதன் மூலம் நண்பர்களுக்கு உங்களின் முகவரியை மறைத்து அனுப்பி கிண்டல் பண்ணலாம், மற்றும் ஒரு சில அலுவலகங்களில் முக்கிய மெயில் தளங்களை முடக்கி வைத்திருக்கலாம் அது போன்ற சமயங்களிலும் இந்த முறை உங்களுக்கு உதவி புரியும்.

Anonymous Mail அனுப்ப இந்த தளத்தில் செல்லுங்கள். உங்களுக்கு அந்த தளம் ஓபன் ஆகி கீழே இருப்பதை போல இருக்கும். அதில் To என்ற இடத்தில் அனுப்ப வேண்டிய முகவரியை கொடுக்கவும்.

Message என்ற பகுதியில் நீங்கள் அனுப்ப வேண்டிய செய்தியை கொடுத்து பிறகு கீழே உள்ள Send Anonymously என்ற பட்டனை அழுத்துங்கள். அவ்வளவு தான் உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்காமல் மற்றவர்களுக்கு மெயில் அனுப்பி விடலாம்.

இந்த முறையில் அனுப்பப்படும் ஈமெயில்கள் உடனே சென்று சேராது. அதிகபட்சம் 12 மணி நேரம் கூட ஆகலாம். 

Note: இதன் மூலம் அனுப்பப்படும் மெயில்களில் உங்கள் ஈமெயில் ஐடியை தெரியாமல் மறைத்தாலும் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் சேமிக்கப்படும். ஆகவே விபரீதமாக எந்த மெயிலும் அனுப்ப வேண்டாம். தண்டனையில் மாட்டி கொள்வீர்கள்.




என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

0 கருத்துகள்: