கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை பற்றை அறிந்திருப்போம். கணினியில் வீடியோ ஆடியோ பைல்களை இயக்க உதவும் இலவச மென்பொருள்.இந்த மென்பொருளில் ஏராளமான வசதிகள் உள்ளது. மற்றும் இந்த மென்பொருள் வெறும் பிளேயராக மற்றும் இல்லாமல் சிலமற்ற வசதிகளையும் கொண்டுள்ளது. ஆனால் பெருமாலானவர்கள் அந்த வசதிகள் இருப்பது கூட தெரியாமல் அதற்கென தனித்தனி மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று இரண்டு வசதிகளை பற்றி பார்ப்போம்.
வீடியோவில் இருந்து Snap Shot எடுப்பது எப்படி:
VLC மீடியா பிளேயரில் ஏதேனும் ஒரு வீடியோ ஓடிகொண்டிருக்கிறது என வைத்து கொள்வோம். அந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு காட்சியை போட்டோவாக Snapshot எடுக்க வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட காட்சி வந்தவுடன் மேனுபாரில் Video - Snapshot கொடுத்தால் போதும் உங்களுக்கு பிடித்த காட்சி போட்டோவாக உங்கள் கணினியில் சேமிக்க பட்டுவிடும்.
snapshot எடுத்த பகுதியின் மாதிரியை சிறியதாக இடது பக்கத்தின் மேலே உங்களுக்கு காட்டும். மற்றும் போட்டோ சேமிக்கும் இடத்தையும் உங்களுக்கு காட்டும்.
Snapshot பார்மட் மாற்ற :
டீபால்டாக png பார்மட்டில் உங்களுடைய Snapshot சேமிக்க ப்படும். இதனை JPG பார்மட்டிற்கு மாற்ற விரும்பினால் Tools - Preferences - (or) Ctrl+P கொடுத்து வரும் விண்டோவில் Video என்பதை தேர்வு செய்யவும். அதில் Snap shot பகுதியில் போட்டோ பார்மட்டை மாற்றி Apply பட்டனை அழுத்துங்கள்.
ஒரே கிளிக்கில் Snapshots எடுக்க:
ஒரே கிளிக்கில் snapshot எடுக்கும் வசதி வேண்டுமெனில் View - Advanced Controls தேர்வு செய்தால் கீழே சில பட்டங்கள் தெரியும் இரண்டாவதாக உள்ள Camera ஐக்கான் பட்டனை அழுத்தினால் ஒரே க்ளிகிங் snapshot எடுக்கும் வசதியை பெறலாம்.
மேலே உள்ள முறைகளை பயன்படுத்தி VLC பிளேயர் மூலம் சுலபமாக வீடியோவில் இருந்து Snapshot எடுத்து கொள்ளலாம்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் கீழே ஒடுள்ள ஓட்டு பட்டையில் ஓட்டு போட்டு செல்லவும் இந்த தகவல் பலருக்கு சென்றடைய ஏதுவாக இருக்கும்.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக