
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் `லீக்' முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான அரை இறுதிக்கு முன்னேறும். ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 3 அணிகள் தற்போது போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 17 புள்ளியுடன் உள்ளது. அந்த அணி பஞ்சாப் சென்னையுடன் மோத வேண்டி உள்ளது. இந்த 2 ஆட்டத்திலும் தோற்றாலும் கூட அந்த அணி அரை இறுதிக்கான வாய்ப்பை இழக்காது.
பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. சென்னை, மும்பை இந்தியன்ஸ் தலா 16 புள்ளியுடன் உள்ளது. சென்னை அணி கொச்சி, பெங்களூர் அணியுடனும், மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் கொல்கத்தாவுடன் மோத வேண்டும். இதில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் ஜெயித்தால் உறுதியாகும். தோற்றாலும் ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருப்பதால் வாய்ப்பு குறையாது.
கொல்கத்தா அணி 14 புள்ளியுடன் உள்ளது. புனே, மும்பையுடன் மோத வேண்டும். இதில் ஏதாவது ஒரு ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றாக வேண்டும். பஞ்சாப் அணி 12 புள்ளியுடன் உள்ளது. இன்னும் 2 ஆட்டம் உள்ளது. பெங்களூர், டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுடன் மோதுகிறது.
இந்த இரண்டு ஆட்டத்திலும் வென்றால் அந்த அணி 16 புள்ளியை பெறும்.கொச்சி- புனே அணிகளுக்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகள் தான் அடுத்த சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக