என்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்
கனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.
1- ஈழ தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை விரட்டி சென்று கொத்து கொத்தாக ராஜபக்ச கொன்ற பொது ஒருமணி நேரம் கலைஞர் உண்ணாதவிரதம் இருந்தது. அதை நேரடி ஒளிபரப்பும் செய்து கொண்டது. கலைஞருக்கு வேர்க்கும் என ராஜாத்தி அம்மாள் அவரது முடி இல்லாத தலையை துடைத்து விட்டது.
2- அதே பிரச்சனைக்கு தினசரி கடிதம் எழுதி ஒரு ஸ்டாம் ஒட்டி பிரதமருக்கு அனுப்பியது. அதை அந்த ஆபீஸ் பியோனாவது படித்தானா என்பது பற்றி கவலையே படாதது.
3- இலவசம் இலவசம் என்று இலவசவீடுகள், ஒரு ரூபாய் மண்,கற்கள் கலந்த அரிசி கலர் டிவி என் கொடுத்து ஓட்டு வாங்கிட துடிக்கும்
கேவலமான தந்திரம்.
4- ராசா இமாலய ஊழல் செய்த போதும் அதை ஒப்பு கொள்ளாமல் அவர் சிறையில் களி தின்ன பிறகு தான் கட்சியை விட்டு நீக்குவேன் என்று அடம்பிடிப்பது.
5- ராசா விவகாரத்தால் வாசிங்டன் போஸ்ட் வரை இந்தியாவில் இப்படி ஒரு பணப்பேய் இருக்கிறது என்று இந்தியாவின் மானத்தை வாங்க வைத்தது.
6- இந்திய மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்படுகின்ற வேளைகளில் மீனவ குடும்பங்களுக்கு உதவி செய்யாமல் ஒரு கவிதை எழுதி கலைஞர் டிவியில் ஒளிபரப்பி மொக்கை போடுவது.
7- தொடர்ந்து கதை வசனம் எழுதி தமிழ்மக்களை வாந்தி எடுக்க வைப்பது.அதை விட கொடுமை அவர் வசனம் எழுதிய படங்கள் ஓடுவதுக்கு முறுக்கு, லட்டு எண்டு மக்களுக்கு கொடுத்து பேதி என்று வீட்டுக்கு ஓடவைக்கிறது .
8- ஓட்டுக்கு லஞ்சம் படிப்புக்கு லஞ்சம் வீட்டுக்கு லஞ்சம் என்று வறிய மக்களின் வாழ்க்கையில் மண்ணை வாரிப்போடுவது .
9- ஓட்டுக்காக குஸ்பு போன்ற நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி
கொடுத்த கஸ்தூரிபாய்களை கட்சியில் சேர்த்து மக்களை வெறுப்படைய
வைப்பது .குஸ்பு யார் என்று நம்ம கார்த்திக்கை கேட்டால் சொல்லுவார் .
10- தமிழ் சினிமா விழா என்றால் ஓடி போய் முன்வரிசையில் இருந்து தன்னை
மற்றவர்களை பாரட்ட விட்டு விட்டு அந்த பாராட்டு மழையில் தூங்குவது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக