| சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார். சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும். பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான். பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க. சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும். விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார். சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும். கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார். ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார். ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான். | ||||
| ஒரு சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது சுவத்துல என்னமோ எழுதியிருக்க படிச்சார் “இதை படிப்பவன் முட்டாள்”.அவருக்கு கடுப்பாயிடிச்சி. நின்னார்....யோசிச்சார்...எழுதியிருக்கிறத அழிச்சார்... திரும்ப எழுதினார் | ||||
| ஒரு சர்தார்ஜி பால்கனில வேடிக்கை பார்த்துட்டு இருந்தப்போ ஒருத்தன் ஓடி வந்து பூட்டாசிங் உன் தம்பி ஆக்ஸிடன்ட்ல பூட்டான்ன்னான். தம்பியே செத்துட்டான் இனி எனக்கென்ன?ன்னு பொசுக்குன்னு மாடில இருந்து குதிச்சிட்டார்.பாதி வழில ஒரு பைப்பை புடிச்சுக்கிட்டு 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார்.மாடில தகவல் சொன்னவன் ஏன்யா அழறன்னு கேட்டான்,இவரு,எனக்கு தம்பியே இல்லைப்பா, இவ்ளோ முட்டாளா இருக்கேனேன்னு திரும்ப குதிச்சார்.ஆனா காயத்தோட தப்பிச்சிட்டார், திரும்ப 'ஓ'ன்னு அழ ஆரம்பிச்சார். இப்ப ஏன்யா அழற? நான் பூட்டாசிங்கே இல்லைப்பா | ||||
| நம்ம சர்தார்ஜி வேலைக்கு அப்ளிகேஷன் போட ஃபார்ம் எழுதிட்டிருக்கார்.பேரு, ஊரு, முகவரி எல்லாமே எழுதிட்டார். நடுவில "Salary Expected" அப்டின்னு வந்திருக்கு , ரொம்ப நேரம் யோசிச்சு தயங்கி தயங்கி கடைசியா எழுதினார் "Yes". | ||||
| ஒரு பெங்களூரி, ஒரு மதராஸி ,ஒரு சர்தார்ஜி மூணு பேரும் ஒண்ணா ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில வேல பாத்தாங்களாம் தினம் மதியம் ஒண்ணா மொட்ட மாடில உக்காந்து சாப்பிடுவாங்களாம் அன்னைக்கும் அதே மாதிரி ஒண்ணா சாப்பிட முதல்ல பெங்களூரி டிபன் பாக்ஸ்ஐ திறக்க இட்லி இருக்க சலிப்பா சொல்றான் ," நாளைக்கும் இட்லியே இருந்தா நான் இங்கிருந்து குதிச்ச்டுவேன்". மதராஸி பாக்ஸ்ஐ திறக்க அவனுக்கும் இட்லி கடுப்பாகி " நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"னான் அடுத்தது சர்தார் திறக்க அதுலயும் இட்லி, " அவரும் நாளைக்கு இட்லி இருந்தா நானும் குதிச்சுடுவேன்"ன்னார் மறு நாள் பெங்களூரி டிபன் பாக்ஸ் திறந்தா அதே இட்லி மறு பேச்சு பேசலை எட்டாவது மாடிலேர்ந்து குதிச்சிட்டார் மதராஸி பயத்தோட திறக்க அங்கயும் இட்லி அவரும் குதிச்சிட்டார் சர்தார்ஜி திறக்க மறுபடியும் இட்லி அவரும் குதிச்சிடறார் எழவு அன்னைக்கு மூணு பேர் மனைவிகளும் சந்திச்சிக்கிறாங்க மதராஸி மனைவி ,"அய்யய்யோ இப்டி பண்ணிட்டீங்களே உங்களுக்கு பிடிக்கலைனா செஞ்சிருக்கவே மாட்டேனே" பெங்களூரி மனைவி ,"ஆமாங்க ஏங்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்க கூடாதா தோசை தந்திருப்பனே" சர்தார்ஜி மனைவி ,"அய்யய்யோ எனக்கு ஒண்ணுமே புரியலயே அன்னைக்கு நீங்க தானே சமைச்சீங்க" | ||||
| ஒரு பத்திரிக்கை அலுவலகத்திற்கு சர்தார்ஜியிடமிருந்து போன் கால் வந்தது, "இரங்கல் செய்தி வெளியிட வேண்டும், ஒரு வார்த்தைக்கு எவ்வளவு?" "ஒரு வார்த்தைக்கு ஐம்பது ரூபாய் சார்" "உறுதியாகவா சரி... எழுதிக்கொள்ளுங்கள் பாண்ட்டாசிங் இறைவனடி சேர்ந்தார்" "ஒரு நிமிஷம் சார் சொல்ல மறந்து விட்டேன் மினிமம் ஐந்து வார்த்தைகள்" "அப்படியா ம்ம்ம்...சரி இப்படி எழுதிக்கொள்ளுங்கள்..." "பாண்ட்டாசிங் இறைவனடி சேர்ந்தார் மாருதிகார் விற்பனைக்கு" | ||||
| சர்தார்ஜி ரோட்டில நடந்து போகும்போது வழியில வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாக்காம வழுக்கி விழுந்துட்டார்.மறு நாள் அதேமாதிரி வாழைப்பழத்தோல் கிடக்கறதப்பாத்துட்டு சலிப்பா சொல்றார், "சே இன்னைக்கும் விழணுமா?" | ||||
| ஒரு சர்தார்ஜி உடம்பு முடியாம மரணப்படுக்கையில இருந்தார்.இன்னொரு சர்தார்ஜி அவர பாக்க போனார்.அவரு இவரு கிட்ட நலம் விசாரிச்சிட்டு இருக்கவே அவரு நிலைமை சீரியஸ் ஆகிடுச்சு.அவரால பேசவே முடியல...ஆனா ஏதோ சொல்லணும்னு பிரியப்படறார்.இவரு உடனே பேப்பரும் பேனாவும் கொடுத்தார்.அவரு வேகமா எழுதும்போதே உயிர் பிரிஞ்சிடிச்சி.இவரும் ஏதோ பர்சனல் படிக்கக்கூடாதுன்னு பத்திரமா பாக்கெட்ல போட்டுக்கிட்டார்.அதை அப்படியே மறந்துட்டார் ரெண்டு நாள் கழிச்சு சடங்குல ஞாபகம் வந்து அவரோட குடும்பத்தார் கிட்ட குடுத்தார்.அவங்க பிரிச்சி படிக்க அதுல எழுதியிருந்தது : " ஆக்சிஜன் ட்யூப்ல இருந்து காலை எடுடா" | ||||

0 கருத்துகள்:
கருத்துரையிடுக