எல்லாம் ஒரு விளம்பரம்
பாரம்பரிய உடைத்திருவிழாவில்
விளம்பரமில்லாமல்
அம்மணத்தோடு ஒரு
குழந்தை
பிரதான பத்திரிகையில்
இரண்டாம்பக்கம்
இரண்டாம் நிலைப் பத்திரிகையில்
எல்லாம் முதல் பக்கம்
என மணமகள் தேவை விளம்பரம்
கொடுத்தாயிற்று ஆனால்
பக்கத்தில் வரதட்சணை வழக்கில்
இருவர் கைது என்ற செய்தியை
கவனிக்கத் தவறிவிட்டோம்.
*****
கோரிக்கைகளும்
விளம்பரங்களும்
இல்லாத உண்ணாவிரதம்
பட்டிணிச்சாவு
*****
பசுமை சூழ்ந்த புல்வெளி
பிம்பம் கொண்ட விளம்பரப் பலகையை
வெறித்துப் பார்க்கிறாள் தாய்.
வெற்று பால் பாக்கெட்டுகளை
நுகர்ந்துப் பார்க்கிறாள் மகள்.
இனி பால் தரப்போவது அந்த பசுயில்லையே ..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக