இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 18 மே, 2011

இது லஞ்சம் வாங்குவதற்கான டிப்ஸ்


தேவையானப் பொருட்கள்:
100 கிராம் கடலைமாவு
50 கிராம் சர்க்கரை
பெரியளவு பீட்ரூட்
ஒரு பாக்கெட் பிஸ்கெட்
ஒரு டம்ளர் நல்லெண்ணெய்
தேவையான அளவு உப்பு



லஞ்சம் வாங்கும் நாட்களில் குளித்து சுத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எப்பொழுதும் இரண்டு விரல்களில் வாங்கவும் கொடுக்கவும் கற்றுக்கொள்ளவும். சீக்கிரமாக பணத்தை எண்ணக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஒருவரைப் பார்த்தவுடனே அவரின் பாக்கெட்டின் மதிப்பை கணிக்கத் தெரிந்திருக்க வேண்டும். முகத்தை கோபமாகவும் மகிழ்ச்சியாகவும் காட்டும் மோடிவித்தை பழகிக்கொள்ளுங்கள்.
பொதுவாக வாங்கப்படும் பணத்தை கையில் வாங்க வேண்டாம், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு பையில் உள்ளதை வீசி உங்களுக்கு விசுவாசமாக ஆக்கிக் கொள்ளங்கள்.
இப்போது டிப்ஸ்...
காலையில் எழுந்தவுடன் அரை டம்ளர் எண்ணையை உடம்பில் தேய்த்துக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்). மிகவும் மிடுக்கான அழகான சால்வைக்கு பதில் கொஞ்சம் அழுக்கான சால்வையை தயார்படுத்திக் கொள்ளவும். பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு நன்கு வெட்டிக்கொள்ளவும். புதியதாக வாங்கி வந்த 100 கிராம் கடலைமாவை நன்கு சலித்து எடுத்துக்கொள்ளவும்.
சர்க்கரையில் கலப்படமாகியுள்ள உள்ள ரவையை நேர்த்தியாக நீக்கி தயார்படுத்தவும். இப்போது அடுப்பை பற்றவைத்து வாணலியை அடுப்பில் வைக்கவும் (முக்கிய குறிப்பு : போலி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தினால் விபத்துக்கள் நேரலாம்) வாணலி பாத்திரம் கட்டாயம் கைபிடியில்லாமல் இருக்க வேண்டும். பாத்திரம் சுடானவுடன் எண்ணையை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் வெட்டிவைத்த பீட்ரூட்டையும் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பொன்னிறம் ஆகும்வரை கவனமாக கையாளவும்.
உங்கள் மொபைலை சுட்சாஃப் செய்வது நல்லது, மற்றும் டிவிட்டரில் தாங்கள் எங்கு இருக்குறீர்கள் என ஸ்டேடஸ் மெசேஜ் விடவேண்டாம். பீட்ரூட் நன்கு வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி தனியாக எடுத்து ஆறவிடவும். அடுத்ததாக வாங்கிவந்த சர்க்கரையை (அஸ்கா) அதே வாணலியில் போட்டு வறுக்கவும்.
மக்களே பொறுங்கள்... இது லஞ்சம் வாங்குவதற்கான டிப்ஸ்தான் சந்தேகம் வேண்டாம்.
இதற்கிடையில் தினமும் பயன்படுத்தும் செருப்பை கொஞ்சம் பிய்த்துக்கொள்ளவும் தேவைக்கு எற்ப தையல்களையும் போட்டுக்கொள்ளவும். இப்போது வதங்கிய பீட்ரூட்டை முகத்தில் தேய்த்துக்கொண்டு, மீதி எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளவும். அடுத்து, கடலைமாவை உங்கள் சால்வையில் தூவி மீதியை சட்டை பையில் போட்டுக்கொள்ளவும் (காரணம் கடைசியில் சொல்லப்படும்).
நீங்க வறுத்த வறுவலில் பாத்திரம் கரி பிடித்திருக்கும், அதை அப்படியே எடுத்துக்கொண்டு சால்வையை போர்த்திக் கொண்டு போய் உங்களுக்குப் பிடித்தமான பஸ் ஸ்டாண்டின் முனையில் முன்னர் கூறிய செருப்புடன் நிற்கவும். உங்களை சுற்றி முறைக்கும் நாய்களுக்கு பிஸ்கெட் துண்டங்களைப் போட்டு விஷ்வாசப்படுத்துங்கள்.
உங்களுக்கு லஞ்சமாக நாணயங்கள் உங்கள் பத்திரத்தில் விழும்; சீக்கிரமாக எண்ணி கைபடாமல் பையில் போட்டுக்கொள்ளுங்கள். லஞ்சம் போடாதவரை கோபமாகவும், போட்டவரை மகிழ்ச்சியாகவும் பார்த்து சிரியுங்கள். பழைய பிச்சைக்காரர்கள் உங்களை விரட்டினால் பையிலுள்ள கடலை மாவை இரண்டு விரலால் அவர்களின் கண்களில் வீசி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
போலீஸ் யாராவது உங்களை பிடிக்க முயற்சித்தால் சால்வையை தூக்கிப் போட்டு உடம்பில் உள்ள எண்ணெய்யால் தப்பித்துக்கொள்ளுங்கள்.
இந்த முறையால் லஞ்ச ஒழிப்பு துறையில் நீங்கள் சிக்கமாட்டீர்கள்..
.
என்னங்க அந்த உப்பு எதுக்குன்னு கேட்குறீங்களா? அதை நீங்க சோற்றில் போட்டுச் சாப்பிடத்தான்!!

Post Comment

0 கருத்துகள்: