இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 4 மே, 2011

சிறுகதை, மொக்கை


வாசுகிக்கு அது ஒரு மகிழ்ச்சியான நாள். அதுதான் அவளுக்கு முதல் முறை வேறு. மாப்பிள்ளை ஒரு விஞ்ஞானி என்று சொன்னதும் அதீத சந்த்த்தோ..ஷம். ஆனால் கருப்பன் என்ற பெயர்தான் கொஞ்சம் "விஞ்ஞானிக்கு" பொருந்தாமல் இருப்பதாகப் பட்டது. எது எப்படியானாலும் இது ஒரு "ட்ரீம் கம் ட்ரூ" என்பதில் வாசுகிக்கு சந்தேகம் இல்லை.

ஒரு பெரும் படையே திரண்டு பெண் பார்க்க வரும் என்று நினைத்திருந்த வாசுகிக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். அப்பா அம்மாவுடன் மட்டுமே வந்திருந்தான் கருப்பன். குறுந்தாடியாகவோ, அமெரிக்கா மாப்பிள்ளை போல முழுச்சவரமாகவோ கற்பனை செய்து வைத்திருந்ததும் ஏமாற்றமே. கருப்பனுக்கு கொஞ்சமே கடா மீசை இருந்தது ரொம்பவே பயமுறுத்தியது. பட்டு வேட்டியும், கொஞ்சம் டார்க் நிற சட்டையும் அணிந்து கொஞ்சமே கொஞ்சமாக நகைக் கடை சுமந்து அமர்ந்தான். கருப்பனின் செல்போன் வேறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை அடித்துக் கொண்டே இருந்தது.

வாசுகி காபி கொடுத்து விட்டு கருப்பனை கொஞ்சம் நோட்டம் விட்டு உள்ளே வந்து விட்டாள். செல்போன் இன்னொரு முறையும் அடித்தது. செல்பொனை எடுத்துப் பார்த்தவன் அதை சைலன்ட் செய்து விட்டு, "எக்ஸ்கியூஸ் மீ" என்றவாறே மெதுவாக நழுவினான். வாசுகிக்கு சந்தேக விதை முளை விட்டது.

கருப்பன் பேசியவாறே வீட்டின் பக்கவாட்டுப் பகுதிக்கு வந்தான். அந்த பகுதியில்தான் வாசுகியின் அறை இருந்தது. அவள் காதைத் தீட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக உன்னிப்பாகக் கேட்டாள்.

"என்னடா.. என்ன பிரச்சினை?"

"...."

"உன்னதானே முடிக்க சொன்னேனே.. முடிச்சிட்டியா?"

"...."

"என்னடா.. இப்படி சொதப்பிட்டியே.. சரி எங்கதான் பிரச்சினை"

"..."

"அப்படீன்னா கைய எடுத்துடு", பகீரென்றது வாசுகிக்கு. மேலும் உன்னிப்பாகக் கேட்டாள். "இதுக்கு எதுக்குடா பயப்படற? எதுன்னாலும் நான் பாத்துக்கிறேன்"

"...."

"போடா.. எத்தனை வருஷ சர்வீஸ் எனக்கு இந்த தொழிலில.. அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது.. எனக்கு உன்கூட பேசிக்கிட்டிருக்க நேரம் இல்லைடா.. எப்பதான் நீயும் இதெல்லம் பழகறது.. இன்னைக்கி ஒண்ணு நீ முடிக்கிற இல்லைன்னா கைய எடுக்கிற அவ்வளோதான்", என்றபடி போனை கட் செய்தான்.

-----------------------------------------------------------

"அப்படில்லாம் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லைம்மா.. தரகர் எல்லாம் சரியா பாத்துதான் இந்த பையனை ரெக்கமென்ட் செஞ்சாரு", என்றார் அப்பா.

"இல்லப்பா.. எனக்கு இது சரியாப் படலை.. பேசாம நம்ம சொந்தத்திலேயே பாத்துரலாம்ப்பா", என்றாள் வாசுகி.

"சரி.. என்னமோ போ.. உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்".

-----------------------------------------------------------

கருப்பன் உள்ளே நுழையும்போது, கண்ணுசாமி கண்கள் சிவந்து, கை நடுங்க உட்கார்ந்திருந்தான். இரவெல்லாம் தூங்கவில்லை என்று நன்றாகத் தெரிந்தது.
"என்னடா இன்னுமா முடிக்கலை", என்றான் கருப்பன்.

"ஆமாங்க கருப்பன்.. கையை எடுக்கலாம்னா, அதுவும் சரியா செய்ய முடியலை, இன்னைக்குள்ள முடிச்சாகணுமே..", சுமேதன் குரலில் பயமும், கலக்கமும், "என்னால தனியா செய்ய முடியலைங்க கருப்பன்.. சாரி" என்றான்.
"கை மட்டும்தானா.. வேறெதுவும்?"

"இல்லைங்க.. இடது கை மட்டும்தான் பிரச்சினை.. மத்த எல்லா மூவ்மென்ட்டும் சரியா இருக்கு… இன்னைக்கு லாஸ்ட் டே ஃபார் சப்மிஸ்ஸன்.. அதுதான் டென்ஷன் வேற"

"சரி.. நான் சொல்றபடி செய்.. கையில் மேலே இருக்கற ஸ்கூருவையும், கீழே இருக்கற கிளிப்பையும் கழற்று.. அதுக்கப்புறம் கமாண்ட் 72 இல் இருந்து கமாண்ட் AF வரை எக்ஸிக்யூட் பண்ணிட்டு கீழே இருக்கற ஸ்கூருவைக் கழற்று.. அதுக்கப்புறம் போர் ஆர்மில் இருக்கற மைக்ரோசிப்பை கழற்றி தனியா ப்ரோக்ராம் செஞ்சு..." சொல்லிக் கொண்டே போனார் நேஷனல் ரோபோட்டிக்ஸ் அக்காடமியின் சீனியர் சைன்டிஸ்ட் கருப்பன் கார்மேகம் தனது ஆய்வகத்தில் தன் ஜூனியரும் சக தமிழருமான கண்ணுசாமி சுதந்திரனிடம்.





டுடே லொள்ளு 

ஒழுங்கா போட்டத தின்னுட்டு வீட்ல இருக்காம இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு எதுக்குடா இங்க வந்து மூச்சு வாங்கி கிட்டு இருக்கீங்க....

Post Comment

0 கருத்துகள்: