
அஜக் சுஜீ.. பாரீசு, பிரான்ஸ். 04.05.2011 அன்புமிக்க அம்சவேணிக்கு! நீ இன்னும் என்னை மறக்கவில்லையா? எதற்காக எல்லோரிடமும் என்னைப் பற்றி சொல்லித் திரிகிறாய்? நான் ஒரு பத்துநாளுக்கு முன்னாடி, உன்னை ஒருதலையாக லவ் பண்ணி, உனக்குப் பின்னால அலைந்தது உண்மைதான்! அ...துதான் நான் கொடுத்த கடிதத்தை நீ கிழித்து எறிந்துவிட்டு, " செருப்பு பிஞ்சிடும் " என்று சொன்னாயே! நான் கூட " அவ்வளவு பழைய செருப்பா? புதுசா ஒண்ணு வாங்கிக்க " என்று, அந்த ரணகளத்திலும், ஒரு டைமிங் பஞ் அடித்தேனே! மறந்துவிட்டாயா? நீ என்காதலை ஏற்க மறுத்த அடுத்த கணமே, நான் ஓடும் டிரெயினுக்கு முன்னால் பாய்ந்து தற்கொலை செய்ய ஓடினேன்! டிரெயின் கிட்ட வரும் போது, அதற்குள் ஒரு சூப்பர் பிகர் இருப்பதைக் கண்டேன்! அவள் என்னைப் பார்த்தாள்! நான் அவளைப் பார்த்தேன்! சத்தியமா உன்னைவிட அவள் சூப்பராகவே இருந்தாள்! போனாப் போகட்டும் என்று அவளையும் லவ் பண்ண ஆரம்பித்தேன்! அவளிடம் எனது காதலைச் சொன்னேன்! அவள் எனது காதலை ஏற்றுக்கொண்டாள்! ஆனால் அவளது புருஷன்காரன் இந்தக் காதலை ஏற்கவில்லை..........!! சரி சரி! இதெல்லாம் உனக்கு சொல்லி என்ன பயன்? நான் உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான்! நீ என்னை மறந்துவிட்டு உனது வேலைகளைப் பாரு! எனக்கும் நிறைய வேலை இருக்கு!! நன்றி! இப்படிக்கு கண்ணீருடன் .... ( பழைய காதலன் ) அஜக் சுஜீ .....

0 கருத்துகள்:
கருத்துரையிடுக