இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 18 மே, 2011

அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே.....

செந்தில்:அண்ணே அண்ணே!உங்க கடைய வாங்குறதுக்கு ஆள் கூட்டிட்டுவந்திருக்கேண்ணே

கவுண்டமணி:டேய் நான் உங்கிட்ட கடைய விக்கிறேனு சொன்னேனாடா

செ:அதுயில்லணே, அவருதான் கடையவாங்கி தந்தா ஜாதகம் கத்துதாரேனாரு
க:படுவா, ஜாதகம் பார்க்க ஆளகூட்டிட்டுவானா கடையவே முட ஆளகூட்டிட்டுவந்திருக்க!
"சார் கூச்சப்படாம விலைய சொல்லுங்க"
க:டேய் இவனே பேருச்சம்பழத்துக்கு காரவிக்கிறவன் அவன நம்பிவந்திருக்கையே கடையும்கிடையாது இடமுகிடையாது ஓடிபோயிரு
செ:போங்கண்ணே வந்த கஸ்டமர விரட்டிட்டேங்க இந்த மாதிரி எஜிகேட் பேமிலியிலயிருந்து யாராச்சும் கிடைப்பாங்களா.
க:அய்யோ..எப்பா...இங்க பாருடா இவர்பெரிய பில் கேட்ஸ் நீயொரு ஜார்ஜ் பூஸ் வந்துட்டானுங்க பிஸ்னஸ்பேச. டேய் ஜாதகம் கத்துக்கனுமின்ன என்ன மாதிரி அறிவாளிககிட்ட கேட்டு கத்துகோடா
செ:அப்படியாண்ணே அப்ப மொதயிருந்து சொல்லிதாங்கண்ணே

க:இதுக்குதாண்ட்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அறிவுராஜாயிருக்கனுங்கிறது.டேய் மண்டைய்யா ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு ஜாதகம் கிடைச்சுருக்கு இத வச்சே இந்த வாரத்தயோட்டிருளாமுனுயிருக்கே.அப்படியே நீயும் கத்துக்கோ,
செ:அண்ணே நீங்கபெரிய அறிவாளிண்ணே
க:டேய் நா ஐடியா டிப்போடா, உனக்கு தெரியுது இந்த ஊர் மக்களுக்கு தெரியலயே
செ:இதெல்லாம் போய் சொல்லனும்ண்ணே
க:உன்ன எதுக்கு வச்சிருக்கே இதயெல்லாம் போய் சொல்லனும்டா
செ:சரிண்ணே! இதவச்சுயென்னா செய்யனும்
க:அதுவா! இந்த இந்தாமுஞ்சிதான் மாப்பிள்ளை, இந்தாஇதுதான் பொண்ணு இதுரெண்டுக்கும் பொருத்தம் பார்க்கணும்
செ:அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
க:என்னட..
செ:அதாவது பத்து பொருத்தம் பத்து பொருத்தம்ங்கிறாங்களே இவுங்க ரெண்டு பேருதான் இருக்காங்க மீதி எட்டு பேரு எங்கண்ணே
க:அடி நாயே! வாயிலே அடிப்பேன்! இவுங்க ரெண்டு பேருதான் அவங்களுக்கு பத்து பொருத்தம் சேருதானு பார்க்கனும்
செ:அப்படியாண்ணே! அண்ணே ஒரு இன்டலிஜெட் கேள்வி!
க:இன்டலிஜெட்டா நீ கேட்க போற.. சரி கேளு
செ:பத்து பொருத்தத்தில நாலு பொருத்தம் சேரலைனா யென்ணாணே செய்வீங்க
க:பழுக்காத பழத்தைக்கூட புகைபோட்டு பழுக்கவச்சிருவேன்டா இந்த அறிவுராஜா ஒம்போதென்ன பத்து பொருத்தம் சேரலைனாலும் சேர்த்து வைப்பேன்டா
செ:மொத பொருத்தம் என்னாண்ணே?
க:அப்படி வா வழிக்கு, மொத தினப்பொருத்தம். ரெண்டு பெயரோட பிறந்த தேதியில எல்லா கிரகங்களும் சரியாயிருக்கானு பார்க்கனும்.(செந்தில் எந்திருச்சு போக) டேய் எங்கடா போற
செ:அடயிருங்கண்ணே! பயாஸ்கோப் எடுத்துட்டுவாறேன் அப்பதான் கிரகம் கரெட்டாத் தெரியும்
க:டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு பயாஸ்கோப்பாகேட்குதா! அது பேரு டெலஸ்கோப்டா.
செ:அண்ணே அப்ப அடுத்தத சொல்லுங்க
க:அடுத்ததுக்கு பேரு கணப்பொருத்தம்
செ:அண்ணே அப்ப ரெண்டு பேரையும் தராசுல வச்சு பார்க்கணுமா?
க:அட நாயே! எட்டிகுதிச்சு ஓடிபோயிரு, உனக்கெல்லாம் ஜாதகம் கத்துதரமுடியாதுடா சாமி.
செ:அண்ணே கோச்சுகிறாதேங்கண்ணே எனக்கு வசியப் பொருத்தம் மட்டுமாவது சொல்லிதாங்கண்ணே
க:நீ எதுக்கு அடிப்போடுறனு எனக்கு தெரியுது..வேணாம்ட..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்
செ:அதில்லண்ணே நான் கத்துகிட்டு உங்களுக்கு போட்டியா வந்திருவேனு பயம்ண்ணே உங்களுக்கு
க:மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில படிச்ச எனக்கு போட்டியா நீயா வருவா போடா ஹே போடா
செ:அப்ப எப்படி ராசி பொருத்தம் பார்க்குறது தயிரியமா சொல்லிதாங்கண்ணே
க:இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத சொல்லிக்கொடுத்தா ஒரு உத்தமனுக்குத்தா சொல்லித்தருவேன்.
{கவுண்டமணி மனைவி கூப்பிட}
செ:அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே என்னனு கேட்டுவரவா!
க:டேய்... நீயிருந்து கடையபாத்துக்கோ நா போனவுடனே வந்திருறேன்.
{சற்று நேரங்கழித்து வருகிறார்}
செ:தானம் கொடுத்த கோழிக்கு பல்ல பிடிங்கிபார்க்கிறாங்கண்ணே
க:டேய் கோழிக்கு ஏதுடா பல்லு
செ:பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக் கூடாது.."
க:இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி
செ:அப்புறயென்னாண்ணே பொண்ணு வீட்டுக்காரன் வந்து ஜாதகம் பார்த்தாச்சானு கேட்டான். நான்தான் பொருத்தமெல்லாம் சரியயிருக்குனு ஜாதகத்தை எடுத்து கொடுத்தா ஒண்ணுமே புரியலைனு சண்டைக்கு வாறான்.
க:டேய் ஜாதகமே இன்னு பார்க்கலடா எதடா எடுத்து கொடுத்த?
செ:அங்க ஒரு பேப்பர்ல காலையிலயிருந்து எழுதினேங்களே அத எடுத்துக்கொடுத்தேன்
க:ஐயோ அது புது பேனாவால நான் கிரிக்கிபார்த்த பேப்பர்டா
{உடனே ஒரு போன்காலில் பொண்ணுவீட்டார் "ஜோசியரே! உங்க ஜாதகத்த படிக்கவே முடியலையே"}
க:அதுவந்துங்க, போன் வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் ஜாதகம் புரியாதுங்க (னு சொல்லி கட் செய்து செந்திலை பார்க்கிறார், செந்தில் உடனே ஓட ..)
க:நம்ம யூருக்கு நாய் பிடிக்கிற வண்டி வந்துச்சுன்னா கண்டிப்பா உன்ன அடுத்தவட்டம் பிடிச்சுகொடுக்கிறேன்

Post Comment

0 கருத்துகள்: