
ஷாருக்கானின் “ரா ஒன்” படத்தில் ரஜினி ஒரு காட்சியில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் ரஜினி நடிக்க வேண்டும் என்று ஷாருக்கான் பல மாதங்களுக்கு முன்பே கேட்டுக் கொண்டார். ஆனால் உடல்நலம் குன்றி ஆஸ்பத்திரியில் ரஜினி அனுமதிக்கப்பட்டதால் ஷாருக்கான் அதிர்ச்சி அடைந்தார்.
ரஜினி மகள் சவுந்தர்யா அப்பா குணமானதும் “ரா ஒன்” படத்தில் நடிப்பார் என உறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை அவர் காப்பாற்றி உள்ளார். ரஜினி இயல்பு நிலைக்கு திரும்பியதையடுத்து சவுந்தர்யா மும்பை சென்று “ரா ஒன்” படத்தில் நடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
தொழில்நுட்ப கலைஞர்களை சென்னையில் இருந்தே தேர்வு செய்து அழைத்து சென்றார். ரஜினி நடித்த காட்சியை அவரே எடிட்டிங் செய்து கொடுத்தார்.
இது குறித்து ஷாருக்கான் கூறும்போது, ரஜினி, கமல் ஆகிய இரு மாபெரும் நடிகர்களுடன் நடித்த அதிர்ஷ்டசாலி நான் என்றார். என்றாவது ஒருநாள் ரஜினி சார் போல நான் அடக்கத்தின் உருவமாக மாற முடியும் என்று கருதுகிறேன். அவர் அற்புதமான மனிதர். என்னை பல வழிகளில் நெகிழச் செய்து விட்டார் என்றும் ஷாருக்கான் கூறினார்.
ரஜினியை மீண்டும் ஒருமுறை நேரில் சந்தித்து நன்றி சொல்லி விடவும் உடல்நலம் விசாரிக்கவும் ஷாருக்கான் நாளை மறுநாள் (9-ந்தேதி) சென்னை வருகிறார். ரஜினி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசுகிறார்.
மேலே படித்தது எல்லாம் விளம்பரம் இதுதான் ரியல் நியூஸ்
ஷாருக்கான் நாளை மறுநாள் சென்னை வருவது கிர்கெட் மேட்ச் பார்க்க அப்படியா ரஜினி பார்க்கிறார் , இது தான் உண்மையான நியூஸ் ,
வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு ,,,, ஷருக்ஹன் ரஜினிய பார்த்தாலும் ,கிரிக்கெட் பார்த்தாலும் நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக