
சுனாமி எச்சரிக்கை சோதனை 25 நாடுகளில் வருகிற 12-ந் தேதி நடக்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட ஆழிப் பேரலை இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளை கபளீகரம் செய்தது. அதில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நடந்த 7 ஆண்டுகள் கழித்து இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை சோதனை நடத்த யுனெஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சோதனை இந்திய பெருங்கடல் பகுதி உள்ள 25 நாடுகளில் நடக்கிறது. அப்போது சுனாமி எச்சரிக்கை விடப்படுகிறது. அந்த நேரம் முன்எச்சரிக்கை பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கப்படுகிறது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக