போங்கடா... நீங்களும் உங்க புடுங்கி ஆஃபரும்.............................
உபயம் : ரஹிம் கஸாலி
நான் ஏர்செல் உபயோகிக்கும் வாடிக்கையாளர். அவர்களிடமிருந்து அடிக்கடி எனக்கு மெசேஜ் வரும். அது என்னன்னா...
நீங்கள் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 50 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 70 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 70 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 100 ரூபாய் கிடைக்கும்
நீங்கள் 150 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 150 ரூபாய் கிடைக்கும்
இப்படி அடிக்கிக்கொண்டே போய்..இறுதியில் இந்த சலுகை(ஆஃபர்) உங்களுக்கு மட்டுமே.....இன்று ஒரு நாள் மட்டுமே என்று குறிப்பிட்டிருப்பார்கள்.
ஆனால், அவர்கள் நமக்கு மட்டும்தான் இந்த சலுகையை வழங்குகிறார்களா என்று பார்த்தால்....அதுதான் இல்லை. ஏர்செல்லை உபயோகிக்கும் என் அம்மாவிற்க்கும் இதை அனுப்பியிருந்தார்கள். என் மனைவி, என் தங்கைகள் என்று அனைவருக்கும் இதே மெசேஜையே அனுப்பியிருந்தார்கள்.
உங்களுக்கு மட்டும் தான்....உங்களுக்கு மட்டும்தான் என்ற ரீதியில் ஏர்செல்லின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அனுப்புவார்கள் போல....அதோடு விடுவார்களா என்று பார்த்தால்....அதுதான் இல்லை.
இன்று ஒரு நாள் மட்டும்தான் இந்த ஆஃபர் என்று தினமும் அனுப்புகிறார்கள். இன்று ஒரு நாள் மட்டுமே என்று எப்போது அனுப்பினாலும் அந்த நாளை மட்டுமே குறிக்கும் என்பதாலோ என்னவோ....
சரி விஷயத்திற்கு வருவோம்.
ஒரு 50 ரூபாய் பணத்தை கொடுத்து 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் அதற்கு பெயர் ஆஃபராம். சலுகையாம். ஒரு மயிரும் புரியவில்லை எனக்கு....
50 ரூபாய் கொடுத்து அதே 50 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினால் அதற்கு பெயர் ஆஃபர் இல்லைடா வெண்ணைகளா?
50 ரூபாய் கொடுத்து 60 ரூபாய் மதிப்பிற்கு எதாவது கிடைத்தால்தான் அது ஆஃபர்.
50க்கு 50 கொடுப்பதை எதுக்குடா ஆஃபருன்னு பேரு வச்சிருக்கீங்க திருட்டு பசங்களா?
ஒரு உதாரணத்திற்கு....10 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் ரூபாய் 6.50 தான் கிடைக்கிறது. மீதியை சாப்பிட்டு விடுகிறார்கள்...சில நேரங்களில் ரூ 6 தான் கிடைக்கிறது.
நான் துபாயில் குப்பை கொட்டுறவன். அங்கெல்லாம் 25 திராகம் ரீசார்ஜ் செய்தால் அப்படியே 25 திராகம் கிடைக்கும். நாம் எவ்வளவு தொகைக்கு ரீ சார்ஜ் செய்கிறோமோ அது ஒரு பைசா கூட பிடித்தமில்லாமல் கிடைக்கும்.
இடையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை போனசும் கொடுப்பார்கள். நாம் அந்த மூன்று மாதத்தில் எவ்வளவு தொகைக்கு ரீசார்ஜ் செய்திருக்கிறோம் என்று கணக்கிட்டு அந்த தொகையை நம் கணக்கில் சேர்ப்பார்கள். உதாரணமாக மூன்று மாதத்தில் 500 திராகம் ரீ சார்ஜ் செய்திருந்தால் 50 திராகம் போனசாக கூடுதலக கிடைக்கும். அப்படி கொடுத்தால் அதற்கு பெயர்தான் போனஸ்...ஆஃபர்...சலுகை...எல்லாம்.
நீங்கள் கொடுப்பதுபோல் 50க்கு 50 கொடுப்பதல்ல....
சரி நான் கேட்கிறேன்...50 க்கு 50 கொடுப்பதையே ஆஃபர் என்று சொல்கிறீர்களே...50 க்கு 60 கொடுத்தால் அதுக்கு என்னடா பேர் வைப்பீங்க...மெகா ஆஃபருன்னா?
போங்கடா நீங்களும், உங்க புடுங்கி ஆஃபரும்....

5 கருத்துகள்:
nadakkattum.....nadakkattum
en peyarai mattum pottu vittu pathivukkaana link-ai vittuvitteer. paravaayillai eppadiyo intha pathivu palaraiyum senru adainthaal sarithaan
paravaayillai nanbaa. neengka namma oorukku pakkaththu oor rajendra puram kaararu...
உண்மைதான் .. ஆபர் என சொல்லி ஆப்பு வைப்பார்கள்
ரஹீம் கஸாலி மற்றும் "என் ராஜபாட்டை"- ராஜா இருவரையும் வரவேற்கிறேன்.(((en peyarai mattum pottu vittu pathivukkaana link-ai vittuvitteer. paravaayillai eppadiyo intha pathivu palaraiyum senru adainthaal sarithaan)))ஆமா நண்பா நீங்கள் சொல்லவும் தான் எனக்கு தோணுது...
கருத்துரையிடுக