
இந்திய அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டுக்கு நாளைய (16-09-2011) ஆட்டம் கடைசி ஒருநாள் போட்டியாகும். இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டார். அப்போது இங்கிலாந்து தொடரோடு தான் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நாளையுடன் இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிகிறது. நாளைய போட்டி முடிந்த பிறகு இந்திய வீரர்கள் சார்பில் டிராவிட்டுக்கு பிரிவு உபசாரம் நடைபெறும். இந்த தொடரில் 4 ஆட்டத்தில் அவர் 55 ரன்களே எடுத்தார். 343 ஒருநாள் போட்டியில் விளையாடிய டிராவிட் 10,820 ரன் எடுத்துள்ளார்.
12 சதமும், 82 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 153 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 39.06 ஆகும். ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் அவர் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடுவார். 157 டெஸ்டில் 12,775 ரன் எடுத்துள்ளார்.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக