
சிம்பு “ஒஸ்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இந்தியில் ஹிட்டான தபாங் படத்தின் ரீமேக் ஆகும். தரணி இயக்குகிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இவ்விழாவுக்கு இந்தி நடிகர் சல்மான்கானை அழைக்கப் போவதாக சிம்பு கூறியுள்ளார். இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இலங்கைக்கு நடிகர், நடிகைகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அங்கு நடந்த இனப்படுகொலை பற்றி சல்மான்கான் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.
திரையுலகத்தினரின் தடையையும் மீறி இலங்கையில் சல்மான்கான் படப்பிடிப்புக்கும் சென்று வந்தார். எனவே சிம்பு ஒஸ்தி பட பாடல் வெளியீட்டு விழாவுக்கு சல்மான்கானை அழைக்க கூடாது. மீறி அவர் வந்தால் சல்மான்கானுக்கு கறுப்புக் கொடி காட்டுவோம். விழா அரங்குக்குள் நுழைந்து போராட்டமும் நடத்துவோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக