காயக்காடு பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி
அறந்தாங்கி, ஜூன் 17: அறந்தாங்கி அருகே காயக்காடு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
காயக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணிக்கு தலைமை ஆசிரியர் சொ. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
பெற்றோர்- ஆசிரியர் சங்கத் தலைவர் என். குணசேகரன் பேரணியை தொடக்கிவைத்தார். பள்ளியில் தொடங்கிய பேரணி காயக்காடு கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ராஜேந்திரபுரம் கடைவீதியில் நிறைவு பெற்றது.
பேரணியில் காயக்காடு ஊராட்சித் தலைவர் தி. சுரேஷ், துணைத் தலைவர் ரா. வீராயி, அங்கன்வாடி பணியாளர்கள் அ. செல்வராணி, மக்கள் நலப் பணியாளர் கு. கலா, மகளிர் சுய உதவிக் குழுவினர், கல்விக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியை அ. சத்யா வரவேற்றார், பேரணி முடிவில் கல்விக் குழு உறுப்பினர் க. செல்வராஜ் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக