இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 18 மே, 2011

கம்ப்யூட்டர்-ராசி பலன்

ஜாலி கம்ப்யூட்டர்-ராசி பலன்

 

ன்பான கணினி சார் மக்களே..! 

இதோ உங்களுக்காக 2010 ஆம் ஆண்டுக்கான பிரத்யேக PC பலன்
...


மேஷம்

மேன்மையான பாசக்கார மேஷ ராசி நேயர்களே! 

உங்களது ஸ்கிரீன் சேவரின் நீட்டிப்புத் தன்மை குறைந்து அடிக்கடி தொந்தரவு கொடுக்கும். அதனால், ஸ்கிரீன் சேவராக வெள்ளைச் சுண்ணாம்பை பூசுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும். இடைப்பட்ட நேரத்தில் மற்றவரை கலாய்த்து மகிழலாம். 

ராசியான பிரவுசர் : நெருப்புநரி 3.5.2

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200

ரிஷபம்

ராஜயோக ரிஷப ராசி நேயர்களே! 

உங்களது கணிணி 20 சதவீதம் செயல்திறன் அதிகமாகி படுவேகமாக இருக்கும். அதனால் தங்களும் வேகத்தை அனுசரித்து ஹெல்மெட் அணிவது சிறப்பு. ரீசைக்கில்பின் காணமால் போகலாம். விண்டோஸுக்கு ரெக்கொஸ்ட் அனுப்பலாம். மால்வேர்கள் 9வது லக்கனத்திலிருந்து மாறுவதால் வேர்கடலை சாப்பிட்டுக்கொண்டால் வேதனைகள் தீரும்.

ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.5

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1366x768
மிதுனம்


மிகுதியான உற்சாகமுடைய மிதுன ராசி நேயர்களே! 

மானிட்டர் திரை கண்களை எரிப்பதால் கண்களை மூடியவாரே கணினியை பாருங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் ஓடோடிப் போகப் பழகிக்கொள்ளுங்கள். ஜங்க் மெயிலை சுத்தம் செய்ய சரியான நேரம் காலை 11:36.

ராசியான பிரவுசர் : ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு இல்லை

கடகம்

கடினவுழைப்பாளியான கடக ராசி நேயர்களே! 

தங்கள் கடவுச்சொலை மற்றவர்கள் தவறாக அடித்து, தங்கள் வங்கி கணக்குகள் முடக்கலாம். அதனால் தாங்களாகவே கணக்குகளை முடக்குவது சாலச் சிறந்தது. சர்வரும் சர்வர் உபகரணங்களாலும் கண்டம் ஏற்படலாம். தெண்டம் ஆகாமல் பார்த்துக்கொள்ள பரிகாரமாக இந்த பக்கத்தைப் பரிந்துரைத்தவரின் லிங்க்கை மூன்று முறை க்ளிக்கி கமெண்டிட்டு, அவருடைய வங்கி கணக்கில் தட்சணையாக சில டாலர்களை போட்டால் தண்டங்களில்லாமல் கொண்டாடலாம் 

ராசியான பிரவுசர்: கூகில் குரோம்

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x1024

சிம்மம்

சிரித்த முகமுடைய சிம்ம ராசி நேயர்களே! 

நீங்கள் விளையாடும் சிறிய கேம்ஸ்களில் தோற்றுவிடுவீர்கள். அதனால் பெரிய பெரிய கேம்ஸ்களை சிறிதாக விளையாடுங்கள். நீங்கள் உள்ளே அனுப்பும் குறுந்தகடு சி.பி.யு.வில் சிக்கிக் கொள்ளலாம். நீங்கள் உள்நுழையும் இயங்கு தளங்கள் 'ஹங்'காகி உஷ்னப்படுத்தும். பரிகாரங்களுக்கு முந்திய ராசிக்காரரைப் பின்பற்றவும்.

ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1024x768

கன்னி

கலையான கன்னி ராசி நேயர்களே! 

உங்கள் கடவுச்சொல் உங்கள் நண்பர்களால் திருடப்படலாம். எனவே முன்ஜாக்கிரதையாக அவரிடம் அந்த கடவுச்சொல்லை கூறிவிடுங்கள். புதியவருடன் ஜி-டாக் செய்து சற்றுநேரம் குழப்பத்தில் விழலாம். ஓப்பென் செய்யும் அப்பிகேஷனில் ஒன்றுமிருக்காது. அதனால் ஒன்று செய்யாமலிப்பது உசித்தம்.

ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1680x1050

துலாம்

துணிவான துலாம் ராசி நேயர்களே! 

கீபோர்டில் சில சமயம் பொத்தான்கள் தூங்கக்கூடும். அதனால் நீங்கள் கீபோர்டில் தலை வைத்து தூங்கினால் நன்றாக தூக்கம் வரும். கூகுளில் உங்கள் துளாவுதல் தெளிவு பெற்றாலும் உங்களுக்கு புரியாது.சில வைரஸ்கள் தூங்கும் போது தலையில் குட்டக்கூடிய வாய்ப்புயிருப்பதால், ஆன்டி வைரஸ் அப்டேட் செய்ய சரியான நேரம் காலை 9:15.

ராசியான பிரவுசர் : நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு : 1280x800
விருச்சிகம்

அதிகமாக விமர்சிக்கும் விருச்சிக ராசி நேயர்களே! 

உள்ளே சென்ற குறுந்தகடு தனது தலைவனுடன் உள்ளே வெளியே விளையாடும். அதனால் குறுந்தகடுகளை கவனமாக கையாளவும். வேர்ட் பையில்கள் கரப்ட் ஆகலாம். இதை பயன்படுத்திக்கொண்டு டாக்குமெண்டேஷன் செய்யாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஆன்டி வைரஸுக்கு பதிலாக அங்கிள் வைரஸ் பயன்படுத்துதல் நல்லது.

ராசியான பிரவுசர்: கூகில்க்குரோம், ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1680x1050
தனுசு

தைரியசாளியான தனுசு ராசி நேயர்களே! 

இன்பாக்ஸில் அதிக மெயில் வந்து தொல்லை செய்யும். அதனால் ஒரு அவுடப் ஆபீஸ் மெயிலை தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் திறக்கும் வலைதளங்கள் மகிழ்ச்சியூட்டுவதாகவே இருக்காது. அதனால் இந்தப் பக்கத்தை மட்டும் திரும்ப திரும்ப படித்து மகிழவும். கலர் கலராக கம்ப்யூட்டர் கனவுகளாக வரும். முடிந்தால் தூக்கத்திலே கோடிங் எழுதுவீர்கள்.

ராசியான பிரவுசர்: ஐ.இ. 1.6

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1600x1200
மகரம்

மரியதைக்குரிய மகர ராசி நேயர்களே! 

மெளஸ் வயர்கள் சிக்கிக்கொண்டு தங்களுக்கு உற்சாகமாக கோபமூட்டும். அதனால் அதிக வாலுடைய மெளசை பயன்படுத்துங்கள். டிவிட்டரில் துரத்துபவர்களால் மனவுளச்சல் பெறலாம். அதனால் மற்றவரை துரத்திப் பழகுங்கள். கணினி ரீஸ்டாட் ஆகையில் மக்கர் செய்யும்; கொஞ்சம் கிரீஸைவிட்டு ஸ்டார்ட் செய்யுங்கள். 

ராசியான பிரவுசர்: ஐ.இ.

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு 1280x1024

கும்பம்

நல்ல குணமுள்ள கும்ப ராசி நேயர்களே! 

உங்களுக்கு இன்று கூகிள் இணைப்பு கிடைக்காமல் போகலாம். அதனால் யாகூவுக்கு போங்கள். ஓப்பென் செய்யும் அப்பிலிகேஷனில் ஒன்றுமிருக்காது. இன்று நீங்கள் ப்ளாக்போட சரியான நேரமில்லாததால் கமெண்ட் போடலாம். மொழி தொரியாத நபர்களிடமிருந்து புரியாத மொழிகளில் புதிய மெயில் வரலாம். அதனால் தெரிந்த மொழியில் புரிந்த மாதிரி பதிலெழுதப் பழகுங்கள்.

ராசியான பிரவுசர்: ஒபேரா

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1280x800
மீனம்

மகிழ்ச்சியான மீனராசி நேயர்களே! 

நீங்கள் அனுப்பும் மெயில் சரியாக போய் சேராது. அதனால் ஒன்றுக்கு மூன்று முறை அதே மெயிலை ஃபார்வர்ட் செய்யவும். டிவிட்டரில் துரத்துபவர்களால் மொக்கை விழ வாய்ப்புள்ளது. இன்டர்நெட் வேகம் குறையும். அதனால் விவேகமாக செயல்படுங்கள். மூன்று முறை மானிட்டரை சுற்றுவது உடலுக்கும் மனதிற்கும் நலம் பயக்கும்.

ராசியான பிரவுசர்: நெருப்புநரி

உங்களுக்கு அனுகூலமான மானிட்டர் அளவு: 1024x768


ஊருக்கு ஒரு உபதேசம்பா:


சுவாமி விவேகானந்தர் "மனிதனின் விதிக்கு அவனே பொறுப்பாளி"

மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடி "சோதிடந்தனை இகழ்"

உங்கள் கருத்தையும் பதியவும்

தகுதியிருந்தால் ஓட்டுப் போட்டுச்செல்லுங்கள் நண்பர்களே

Post Comment

0 கருத்துகள்: