
சிம்புவை வைத்து ஒஸ்தி என்ற படத்தை எடுத்து வருகிறார் தரணி. இது இந்தியில் சல்மான் கான் நடித்து அபார வெற்றி பெற்ற தபராங் படத்தின் ரீமேக் என்பதால், சல்மான் கானை நேரில் சந்தித்து சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளளாம் என யோசித்தார் சிம்பு.
படத்தின் துவக்க விழாவுக்கும் சல்மானை அழைத்திருந்தார் சிம்பு.
ஆனால் துவக்க விழாவுக்கும் வரவில்லை, சிம்புவை சந்திக்கவும் நேரம் தரவில்லையாம் சல்மான். எப்போதும் நான் ரொம்ப பிஸி என்று சொல்லி சிம்புவின் சந்திப்பை தவிர்த்து வருகிறாராம் சல்மான்.
சிம்புவைப் பற்றி யாரோ வேண்டுமென்றே சல்மானிடம் தவறாக சொல்லியிருக்கின்றனர். அதனால்தான் அவர் சந்திக்க மறுக்கிறார் என சிம்பு தரப்பில் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக