
ஹீரோவாகிறார் நமீதா!
கவர்ச்சி கன்னியாக, கனவு தேவதையாக இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த நாயகி நமீதா, ஹீரோவாக களம் இறங்குகிறார் என்றால் நம்பமுடியாமல் தான் இருக்கும், இனி அவர் தூங்காமல் இருக்கப் போகிறார், பிரியம் கிரியேஷன்ஸ் சார்பில், எஸ்.ஆர்.மனோகரன் தயாரிப்பில், பிரபல இயக்குநர் மங்கை அரிராஜன் இயக்கத்தில் நமீதா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.சாதாரண கேரக்டரில் இல்ல, காக்கி சட்டையில் கலக்கப் போகிறாராம். இதற்காக சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறார் நமீதா. “இளமை ஊஞ்சல்” என்ற பெயரில் தொடங்கவிருக்கும் இப்படம், சென்னை, பெங்களூரு, ஹைதரபாத், மற்றும் பிரான்சில் படமாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக