பச்சை செய்திகள்
தேசிய செய்திகள்
- மத்திய தண்ணீர் சேமிப்புத் துறை அமைச்சர் குழாயைத் திறந்துவிட்டே கைகழுவியதாக சிறப்பு வீடியோ வெளிவந்து பரபரப்பு.
- டெல்லிக்கு தண்ணீர் சப்ளை செய்ய வந்த தண்ணீர் லாரிகளைக் கடத்தமுயன்ற தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு.
- பார்லிமெண்டில் நிலவிவரும் கடும் வறட்சியால் இரு சபைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.
- கங்கையில் தண்ணிதர வேண்டுமென்று பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு முன் நடிகர் சங்கத்தினர் ஒரு நாள் நீர் உண்ணாவிரதமிருந்தனர்
மாநில செய்திகள்
- அரசின் இலவச மத்திய உணவுடன் வழங்கப்பட்ட இலவச தண்ணீர் கோப்பைகளை ரூம்போட்டு யோசித்து டேங்க் போட்டு கடத்தமுயன்ற இரண்டு வாலிபர்கள் கைது.
- ஓட்டுக்கு இலவச தண்ணீர் பாக்கெட்டுகள் கொடுத்
ததாக எழுந்த புகாரையடுத்து தேர்தல் ஆணையம் கூடுதல் பாதுகாப்புக்கு ஆணையிட்டுள்ளது. - கச்சத் தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமி
ழக மீனவர்களின் தண்ணீர் பாட்டில்களை இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதால் முன்றாவது நாளாக இன்று மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லவில்லை
உலக செய்திகள்
- தெற்காசிய நாடுகளின் குழாயடி சண்டையை தீர்க்க ஐ.நா. சிறப்புக்குழு இன்று பார்வையிடுகிறது..
- கடல் நீரை குடிநீராக மாற்றுவதாகக் கூறி 3000 கோடி மோசடி
வர்த்தக செய்திகள்
- மாயாண்டி தண்ணீர் சப்ளை&கோ , கடும் விழ்ச்சியிளிருந்த சென்செக்ஸ்சை
மீண்டும் அதிக புள்ளிகளுக்கு உயர்த்தி ஆசியா பங்குச்சந்தையை அசைத்துள்ளது. - நீரில்லாமல் குளிக்க புதுவகை சோப்புக்கள் சந்தைக்கு அறிமுகம்
- பாலில் தண்ணீர் கலப்பதில்லையென பால் விற்பனையாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது
அறிவியல் செய்திகள்
- நீரில்லாமல் வளரும் புதியரக பி.டி.கத்திரிக்காய்கள் உடலுக்கு தீங்குவிளைவிக்கும் என இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.
விளையாட்டு செய்திகள்
- நேற்று நடந்த சார்வதேச கால்பந்து போட்டியில் சிறப்பாக ஆடிய வாட்டர் குமாருக்கு மினரல் தண்ணீர் டப்பாக்கள் பரிசாக வழங்கப்பட்டது.
- நேற்று நடந்த இந்தியா பாகிஸ்தான் இடையேயான டேஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் பொது நீர் பற்றாக்குறையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
சற்றுமுன் வந்த செய்திகள்:
- தேசிய சாலை மேம்பாட்டுக்காக சாலையோர மரங்களை அகற்ற 250 கோடி நிதி ஒதிக்கீடு
- விலை நிலங்களைத்தவிர மற்ற இடங்களில் பிளாஸ்டிக் ரோடுகளும் சிமென்ட் தரைகளுமாக மாற்ற பிளாஸ்டிக் சுரக்ஷா திட்டம் அறிமுகம்
- ஏரி குளங்களில் வீடுகட்ட நிதிச் சலுகை அறிவிப்பு
பொழுதுப்போக்கு செய்திகள்
வருகிற 2050 மார்ச் 22ம் நாளை தண்ணீர் தினமாக கொண்டாட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய செய்தி நாளைய வரலாறு
நாளைய செய்தி இன்றைய எச்சரிக்கை
மணிவண்ணன

0 கருத்துகள்:
கருத்துரையிடுக