கிழக்கு டெல்லி அருகே கர்கர்தோமா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார். இவரது மகள் உள்ளூர் வாலிபரான சந்தீப் என்பவரை காதலித்து வந்தார். இந்த காதலை ஓம்கார் ஏற்றுக் கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்தார். இதனால் அவரது மகள் காதலன் சந்தீப்புடன் கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் 2-ந் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
சந்தீப்பின் சகோதரி வீட்டில் அவள் தங்கி இருந்தாள். காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தாள். இதை அறிந்த ஓம்கார் மறுநாள் மகளை தேடிப்பிடித்து கொலை செய்தார். தனது குடும்பத்தின் கவுரவத்தை காப்பாற்று வதற்காக இந்த கொலையை செய்ததாக ஓம்கார் போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவர் மீது டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சய் சர்மா வழக்கை விசாரித்து ஓம்காருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். கொலை செய்தால் கவுரவம் காக் கப்படுமா? என்று நீதிபதி கேள்வி விடுத்தார்.
இது பற்றி அவர் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
ஒருவரை கொலை செய் வதில் ஏதாவது கவுரவம் உள்ளதா? அல்லது ஒருவரை கொலை செய்வதன் மூலம் தனது குடும்ப கவுரவம் காக் கப்படுமா? இக்கேள்விக்கு இச்சமூகம் விடை கண்டுப்பிடிக்க வேண்டும். சமூகத்தில் எண்ணங்களில் மாற்றம் வரும் வரை இத்த கைய கவுரவ கொலைகள் நடிக்கத்தான் செய்யும். இளைய சமுதாயத்தின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.
பெரியவர்கள் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. கட்டாய திருமணம் குடும்பத்தை சீரழிக்கும் அது என்றுமே ஜொலிக்காது.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக