ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கடந்த வாரம் பேஷன் வார விழா நடந்தது. அதில் அந்நாட்டின் லிசா புளூ நீச்சல் உடை நிறுவனம் புதிய நீச்சல்உடை ஒன்றை அறிமுகம் செய்தது. அந்த உடையில் முன்புறம் மற்றும் ஜட்டியில் இந்து பெண் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டிருந்தது. அதை மாடல் அழகி ஒருவர் அணிந்தபடி விழாவில் ஒய்யாரமாக நடந்து வந்தார்.
இதை உலகம் முழுவதும் பார்த்த இந்துக்களின் மனம் புண்பட்டது. இந்து கடவுளை அவமதிப்பதாக கருதினர். அகில உலக இந்து அமைப்பின் தலைவர் ராஜன் சேத் இந்த நீச்சல் உடை தாயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை நேரில் சந்தித்து இது குறித்து பேசினார். அப்போது, செல்வத்துக்கு அடையாளமாக திகழும் பெண் கடவுள் மகாலட்சுமியை அவமதித்தது குறித்தும், அதற்காக இந்துக்களின் கண்டனைத்தையும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அந்த நீச்சல் உடை நிறுவனம் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீச்சல் உடையில் பெண் கடவுள் லட்சுமியின்படம் பொறிக்கப்பட்டதற்கு இந்துக்கள் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இனி இதுபோன்று தவறுகள் நடக்காது. கடவுள் லட்சுமி படம் பொறித்த நீச்சல் உடை உலகில் எங்கும் விற்பனை செய்யப்படமாட்டார். மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரத்திலும் விற்க கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக