இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அதிக அளவு ஹிட்ஸ் வரும் பதிவு எழுத அனுபவ ஐடியா....கண்டிப்பா பாருங்க .



அதிக அளவு ஹிட்ஸ் வரும் பதிவு எழுத அனுபவ ஐடியா


நீங்க லேப்டாப்லேயும் எழுதலாம்டெஸ்க்டாப்புலேயும் எழுதலாம்!
எதுக்கும் எழுதுறதுக்கு முன்னாடிவைரஸ் ஏதும் இல்லாமல் பாத்து ரெடியா வச்சுக்குங்க!

செல்லை ஆப் பண்ணி வச்சிடுங்கநீங்க நல்ல மூட்லஎழுதிக்கிட்டிருக்கும்     போது  வேறு ப்ளாக்கர் நண்பரோ போன்பண்ணி என்னடா என் பதிவை படிக்கலையா அல்லதுதமிழ்மணத்தில் ஒட்டு போடலியா என்று கேட்டு மூட் அவுட்பண்ண வாய்ப்பு இருக்கு
கல்யாணமாகியிருந்தா பொண்டாட்டிய அவுங்க அம்மா வீட்டுக்குஅல்லது துணிக்கடைக்கோ  அனுப்பிடுங்க! பொண்டாட்டியபக்கத்துல வச்சுக்கிட்டு இதுவரைக்கும் எந்த பதிவாளரும் பதிவுஎழுதினதா சரித்திரம் இல்லை!

அப்புறம் உங்க வீட்டுக்கு ஒரு ஜெனரேட்டர் வாங்கி வைச்சுகுங்க!நீங்க பாட்டுக்கு ஜாலியா பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் போதுபொசுக்குன்னு கரண்டு போயிடுச்சுன்னாஉங்க மூடுஅவுட்டாகிடாது ?
மேஜையில அல்லது அக்கம் பக்கத்துல முகம் பார்க்கும் கண்ணாடிஇருந்தஅதை எடுத்துட்டுப் போய்தூரமா வச்சிடுங்க!எதேச்சையாகூட உங்க முகத்தை நீங்க பார்க்க நேர்ந்தால்அப்புறம்உங்களால ஒரு பதிவுகூட எழுத முடியாது!
உங்க கல்யாண ஆல்பத்தில இருந்து ஒரு போட்டோவை  எடுத்துபக்கத்தில வைச்சிடுங்கஅதைப் பார்க்க பார்க்க உங்கள் மனம்துடிக்கும் கைகள் பரபரக்கும் துக்கம் தொண்டையை அடைக்கும்-அப்புறம் பதிவு பதிவா எழுதி தள்ளுவீங்க! - துன்பத்தில்தான் நல்லபதிவு பிறக்கும் மக்காஸ்.


இவ்வளவும் பண்ணியும் உங்களுக்கு பதிவு எழுத வரலியா?கடைசியா மிக அருமையான ஐடியா இருக்குநீங்க முதல் முதலா காதல் பண்ண பெண்ணை பற்றி எங்காவது எழுதி வைச்சிருந்தாதேடி எடுத்து வாசிச்சுப் பாருங்க - அதில இல்லாத நகைச்சுவையா  அல்லது சோகமாஆயுசுபூரா உங்களுக்குதேவையான நகைச்சுவை அல்லது சோகம் அதில்தான் நிறையஇருக்கும்
அப்புறம் என்ன உங்க ப்ளாக்ல நகைச்சுவை அல்லது சோகத்தைஅள்ளிவிடுங்க - ஹிட்சுகள் எகிறும்பின்னூட்டாங்கள் கரைபுரளும்!! பலோவர்ஸ் நூற்று கணக்கில்  வருவர்கள்தமிழ்தடுமாறும்!! சரித்திரம் தடம் மாறும்.....சும்மா அதிரும்ல உங்கபதிவு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!



இவ்வளவு பண்ணியும்  ஹிட்ஸ் வரலைன்னா  கீழேயுள்ளவைகளை கடைபிடிக்கவும்இதை கடைபிடித்தால்கண்டிப்பாக  தமிழ்மணத்தில் டாப் 50 ல் வருவீர்கள்.அதன் பின்ஹிட்ஸ் உங்களை தேடிவரும்.



1. உடனடியாக ஜுனியர் விகடன்ஆனந்த விகடன் மற்றும் நக்கீரன்ஆகிய பத்திரிக்கைகளூக்கு உடனடியாக ஆன்லைன் சந்தாதாரர்ஆகி அதில் வரும் பரபரப்பு விஷ்யங்களை காப்பி பண்ணி உங்கள்ப்ளாக்கில் உடனடியாக போடுங்கள்இலவசங்களுக்கு ஆளாபரக்கும் நம் தமிழ் மக்கள் அந்த பத்திரிக்கைகளுக்கு சந்தாதார்ஆகமால் உங்கள் ப்ளாக்கிற்கு ப்லோவர்களாக வந்து சேர்ந்துநீங்கள்தான் அந்த பதிவை எழுதியதாக கருதிஅருமையாக எழுதிஇருப்பதாக பின்னூட்டம் இடுவார்கள்.



2. இது அவசர உலகம் அதனால் எல்லோருக்கும் நேரம் மிகவும்முக்கியம் அதுதனால் அவர்களுக்கு நெட்டில் வரும் எல்லா கவர்ச்சிபடங்களையும் பார்ர்க்க நேரம் கிடையாது அதனால் நீங்கள் உங்கள்நேரத்தை செலவழித்து பெஸ்ட் கவர்ச்சிபடமாக தெரிவு செய்துபோடுங்கள்அப்புறம் பாருங்கள் நீங்கள் எவ்வளவு ஹிட்ஸ்பெருகிறீர்கள் என்று



எனக்கு தெரிஞ்சவைகளை சொல்லிட்டேன்எதுவும் வொர்க் அவுட்ஆகலைன்னா பேசாம கடையை மூட்டிட்டு பொடி நடையாபோங்கப்பா

எல்லோரும் ஹிட்ஸ் பற்றி பதிவு போடுறாங்க நாம மட்டும்போடாம இருந்த எப்படிஅதுனால வந்ததுதான் இந்த பதிவு

Post Comment

0 கருத்துகள்: