
ஒரே பெண்ணை காதலிக்கும் இரு நண்பர்கள் கதை...
சந்தோஷ், பிரபா நண்பர்கள். சந்தோஷ் படிக்காமல் அடிதடி என சுற்றுகிறார். அவர் நடத்தைகள் தந்தை விஜயகுமாரை கலங்கடிக்கிறது. நண்பனை திருத்த பிரபா, பவித்ரா என்ற பெண் பெயரில் காதல் கடிதங்களை அனுப்புகிறார். அப் பெண் நினைப்பால் சந்தோஷ் நல்லவனாக மாறுகிறார். படிப்பில் முழு கவனம் செலுத்தி முதல் மாணவராக தேறுகிறார்.
ஒரு கட்டத்தில் பவித்ராவை நேரில் சந்திக்க திருப்பம். நண்பன் பிரபா காதலி பவித்ரா என்பதும் சந்தோசை திருத்த காதலி பெயரில் அவர் காதல் கடிதங்கள் அனுப்பியதுமான முடிச்சுகள் அவிழ்கிறது. நண்பன் காதலி என தெரியாமலேயே பவித்ராவை சந்தோஷ் தீவிரமாக காதலிக்கிறார்.
உண்மையை சொன்னால் நண்பன் மீண்டும் கெட்டவனாகி விடுவான் என்ற பயத்தில் பவித்ரா விடம் காதலியாக நடிக்க சொல்கிறார் பிரபா. பவித்ரா வேறு வழியின்றி காதலியாக நடிக்கிறார். பவித்ராவுக்காக எதையும் செய்ய தயாராகிறார் சந்தோஷ். அவரது மித மிஞ்சிய அன்பு பிடியில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார் பவித்ரா. ஒரு கட்டத்தில் பவித்ரா நண்பனின் காதலி என்ற உண்மை சந்தோஷக்கு தெரிய வருகிறது.
அதன் பிறகு நடப்பவை அதிர்ச்சி திருப்பங்கள். சந்தோஷ், பிரபா நட்பில் வீரியம் காட்டுகின்றனர். பிரபாவுக்காக அடிதடியில் இறங்கும் கோபக்கார நண்பன் சந்தோஷ்... உருவம் தெரியாத காதலி அனுப்பும் கடிதங்களை பார்த்து அவர் மனம் மாறுவதும் ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து இவள் பவித்ராவாக இருப்பாளோ என தவிப்பதும் உணர்ச்சி பூர்வமானவை.
கிளைமாக்சில் அதிரடி முடிவு எடுத்து நிமிர வைக்கிறார். நண்பனுக்காக காதலியையே தியாகம் செய்ய துணியும் பிரபா அனுதாபத்தை அள்ளுகிறார். இரு நண்பர்கள் காதல் வீச்சில் சிக்கி தவிக்கிற அழுத்தமானபவித்ரா கேரக்டரில் வருகிறார் மாயா உன்னி.
நட்பு, காதல் கதைகளத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி படத்தோடு ஒன்றவைக்கிறார் இயக்குனர் அன்பு அருள்நிதி. கவித்துவமான கதைக்கு தலைப்பு திருஷ்டி. கிளைமாக்சில் இழப்பை மாயா உன்னி சகஜமாக எடுத்து நீண்ட வசனம் பேசுவதை தவிர்த்து இருக்கலாம். சபேஷ் முரளி இசையும் நாககிருஷ்ணன் ஒளிப்பதிவும் கைகொடுக்கின்றன.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக