
அஜீத்தின் “மங்காத்தா” படம் ரீலிசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் திரிஷா, லட்சுமிராய், ஆண்ட் ரியா, அஞ்சலி என நான்கு முன்னணி கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
லட்சுமிராய் வில்லியாக வருகிறார். ஆனாலும் மற்ற நடிகைகளை விட லட்சுமிராய் கேரக்டர் பேசப்பட்டது. ஏற்கனவே காஞ்சனா படத்தில் லட்சுமிராய் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்தன. தொடர்ந்து “மங்காத்தா” படமும், பெயர் வாங்கி கொடுத்துள்ளது.
ஆனாலும் இப்படத்தின் விளம்பரங்களில் தன்னை ஒதுக்குவதாக ஆதங்கப்பட்டார். இது குறித்து லட்சுமிராய் கூறியதாவது:-
மங்காத்தா படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். அதில் நான் இல்லை. இதுபோல் படம் சம்பந்தமான வேறு விளம்பரங்களிலும் எனது படம் இல்லை. அதுமட்டுமின்றி டெலிவிஷனில் காட்டப்படும் மங்காத்தா விளம்பரங்களிலும் கூட என்னை காட்டவில்லை.
ஆனாலும் படம் சம்பந்தமான விமர்சனங்களில் என்னை பாராட்டி எழுதியுள்ளார்கள். படத்தை பார்த்தவர்கள் நிறைய பேர் என்னிடம் தொடர்பு கொண்டு நன்றாக நடித்துள்ளதாக பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சி அளித்தது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக