இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

வியாழன், 7 ஜூலை, 2011

கீழ் உள்ளவைகளின்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்...!



1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வுபேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால்குக்கரும், அஜந்தா
கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..!
பேரு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்]
திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு சைஸ்
சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க.
அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க...!

6. மளிகைப் பொருட்களின்பாலிதீன் உறைகளை பத்திரமா வைப்பீங்க..
பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு...!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் பார்ப்பீங்க.
சீல் விழாம இருந்தா, அந்த கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு,
அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ,விரைவுப் பேருந்தோ..இருபக்க கை வைக்கும்
இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரிட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க..[ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி.திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க..
ஏ.சி.கோச்சுன்னா,கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்கவைப்பீங்க.!

11. விமானமோ,ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து
ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க....!

12. புதுசா கார் வாங்கினா,அதுக்கு மணப்பெண்அலங்காரம் பண்ணிதான்
எடுத்துட்டு வருவீங்க.!கொஞ்ச நாளைக்கு சீட்.பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..
நம்பர் எழுதறீங்களோஇல்லையோ.. கொலைகார முனிதுணைன்னு
ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க...!

13.. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான்
உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்தபிள்ளைகளைப் பாரு..எவ்வளவு சாமர்த்தியமாஇருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவேமாட்டாங்க.. அடுத்த
பெற்றோரைப் பாருங்க..எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு
நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா
தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி
குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு
இருக்கும். [உ-ம்.பிரஷர். குக்கர்,காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர்,பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன்,கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.பொங்கல், தீபாவளின்னாவீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு,தகராறுபண்ணி,போலீஸ்-​ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்...
உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..





என்ன நண்பா கை பர பறக்குதா அப்ப நீங்க கண்டிப்பா தமிழன் தான் அப்படியே சொல்லிட்டு போங்க  உங்க கருத்தை  .. 

Post Comment

1 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

நான் தமிழன் தான்,தமிழன் தான்,தமிழன் தான்::::::::::(இதெல்லாம் எழுதின நீங்க யாரு?)