
அடுத்தவேளை பட்டினிக்கும்
அன்றாடங்காய்ச்சிக்கும்
அனைத்து நாளும் வரும்
அமாவாசை நிலா....
பேருந்தில்
அமர்ந்து செல்லும்
அந்த நேரம் கூட - நாம்
அண்ணாந்து பார்க்கமுடியா
அவல நிலா.....
எல்லா நாளும்
ஏசியிலும்
எந்த நேரம்
சீரியலுமாய்
வாழ பழகிவிட்ட
கூட்டத்திற்கு
என்றுமே மனம் தொட
எட்டா நிலா....
காதலர்களும்
கைபேசிவிடு தூதுக்கு
மாறிவிட்டதால்
கவனிப்பாரற்று போன
கண்ணீர் நிலா....
முழுநிலவானாலும்
பிரைநிலவானாலும்
ரசிக்க ஒருவரில்லா
அநாதை நிலா....
வீடு விட்டு பிரிந்து
வாடிவிட்ட
என்போன்றோருக்கு மட்டும்
சிரிப்பதற்கும்
அழுவதற்கும்
சின்ன சின்ன சந்தோசம்
பகிர்வதற்கும்
சித்தமாய் கூடவரும்
சிநேக நிலா.....

0 கருத்துகள்:
கருத்துரையிடுக