வணக்கம் நண்பர்களே..........
இந்த மாக்கானின் எழுத்துக்களுக்கு ஆதரவு அளித்து வரும் நண்பர்களுக்கு என் முதல் வணக்கம்...........
இதுவரை என் பதிவுலக வாழ்கையில் நான் யாருக்கும் மைனஸ் எனும் எதிர் ஓட்டு போட்டதில்லை........பல அசிங்கமான எழுத்து நடையில் எழுதப்பட்ட பதிவுக்கு கூட ஓட்டு போட மனமில்லாமல், நண்பன் என்ற போதிலும் அவருக்கு என் கருத்தை மட்டும் சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்.......
இந்த பதிவுலக அரசியலில் நான் இதுவரை சிக்காமல் போய் கொண்டு இருக்கிறேன்.....எனக்கு எல்லோரும் நண்பர்களே......அதனால் யாரையும் எதிரியாக நான் நினைப்பதில்லை.......பல கள்ள ஓட்டு வைத்திருக்கும் பதிவர்களையும் நான் அறிவேன்.........என்னை பொறுத்தவரை நான் எனக்கு தோன்றியதை பகிர்கிறேன் அவ்வளவே....
என்னை பொறுத்தவரை ஒரு பதிவு எனக்கு பிடிக்கவில்லை என்றால், எதிர் கருத்து சொல்லிவிட்டு வந்து விடுவேன்(49 O! ஹிஹி!)........அதை விடுத்து அவரின் உழைப்பை கொச்சை படுத்தி எதிர் ஓட்டு அளித்ததில்லை.......என்னை போல நீங்கள் இருக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை........ஆனால், எல்லோருக்கும் ஒரு ஆதங்கம் இருக்கும்.........எப்பேர்பட்ட பதிவரும் தன் கருத்துக்களை தவறு என்று சொன்னால், அதை எதிர்த்து தர்க்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.........
ஆனால் சம்பந்தமே இல்லாத ஒரு சிரிப்போடு சிந்திக்க வைக்க நினைத்த(!) பதிவில் ஓட்டு எனும் கேவலமான எதிர்வினை பயன் படுத்துவது என்னை பொறுத்தவரை தவறு.......ஒவ்வொருவர் கண்ணோட்டத்திலும் உலகம் வேறாகவே தெரியும்......எனவே இது என் பார்வை மட்டுமே..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக