மணி வேலை முடிந்து வீடு திரும்பியவர் இரவு
சாப்பாடு ரெடியானதும் சாப்பிட உட்கார்ந்தார்.
மணியின் மனைவி தட்டு வைத்து சோறு
போட்டு சைட் டிஷ்ஷாக முட்டை ஆம்லேட் வைத்தார்.
மணி கடுப்பாகிவிட்டார்.
"ஏன் ஆம்லேட் செய்தாய்? முட்டையை அவித்திருக்கலாமே?"
என்று திட்டிவிட்டு சாப்பிட்டு போய்விட்டார்.
மறுநாள் இரவு சாப்பிடும்போது மணியின் மனைவி
அவித்த முட்டையை வைத்தார்.
கோபமான மணி , " ஏன் முட்டையை ஆம்லேட்
போட்டிருக்கலாமே? " என்று சப்தம் போட்டு விட்டு
சாப்பிட்டு எழுந்து போனார்.
மூன்றாம் நாள் மிசஸ் மணி முன்னெச்சரிக்கையாக
ஒரு முட்டை அவித்தும் ஒரு முட்டை ஆம்லேட்டாகவும்
செய்து வைத்து மிஸ்டர் மணியை சாப்பிட
அழைத்தார்.
சாப்பிட உட்கார்ந்த மணி ஆம்லேட், அவித்த முட்டை
இரண்டும் இருப்பதைப் பார்த்துவிட்டு, திரும்பி
மிசஸ் மணியிடம் அவித்த முட்டையைக் காட்டி,
"இந்த முட்டையை ஆம்லேட் போட்டுருக்கணும்" என்று
சொல்லிவிட்டு ஆம்லேட்டைக் காட்டி, "இதை அவித்திருக்கணும்;
மாத்தி செஞ்சிட்டியே!" என்று கூறிவிட்டு, சமர்த்தாக
சாப்பிட்டு எழுந்து போனார்.
மிசஸ் மணி எதுவும் தோன்றாமல் திகைத்து நின்றார்.
அன்பு நண்பர்கள் அனைவரும் உங்கள் கருத்தை சொல்லவும்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக