| திருடன் வந்தால் எங்க நாய் சிக்னல் கொடுத்திடும்...! எப்படி? வேகமாக ஓடிப்போய் பத்திரமா எங்காவது ஒளிஞ்சிக்கும். | |
| உண்ண முடியாத பண் எது? ரிப்பன். | |
| அதோ வருகிறாரே அவர் வாழ்க்கையில் எதிர்பாராத பல திருப்பங்களை பார்த்தவர். அப்படியா அவர் என்ன பண்ணுகிறார்? லாரி ஓட்டுகிறார். | |
| தோசையை ஏன் திருப்பிப்போடுகிறோம்? அதுவா திரும்பாது. | |
| ஏன் மாமா வீட்டிற்கு டி.வி. வாங்கலை? பையன் படிப்பு கெட்டுவிடும் அதனால் டி.வி. வாங்கவில்லை. பையன் எங்க மாமா பக்கத்து வீட்டிற்கு டி.வி.பார்க்க போயிருக்கான். | |
| மாப்பிள்ளை நீங்க தண்ணி அடிப்பீங்களா? ரொம்ப நன்றி மாமா, காலையில் இருந்து கல்யாண டென்ஷன். நான் நினைச்சேன் நீங்க கூப்பிட்டிங்க வாங்க. | |
| அந்த பௌலரோட பேண்ட் எப்படி தீப்படிச்சுதாம்? ஒரு மணி நேரமா பந்தை பேண்ட்ல தேய்ச்சுக்கிட்ருந்தாராம்? | |
| முட்டாள் 1 - இந்த புதன் கிரகத்துக்கு போகுறது என்ன அவ்வளவு கஷ்டமா. நாம் நினைத்தால் போகலாம். இல்லையா? முட்டாள் 2 - ஆனால் சூரியன் பக்கத்தில் சென்றால் அப்படியே கருகிச் சாம்பலாகி விடுவோமே. முட்டாள் 3 - அதனால் என்ன, இரவில் பயணத்தை வைத்துக் கொண்டால் போகிறது பகலில் போனால் தானே ப்ராப்ளம். | |
| எறும்பு யானையிடம் என்னை கைவிட்டு விடாதே என்று அழுததா, ஏன்? எறும்பின் வயிற்றில் யானையின் வாரிசு வளருவதால். | |
| பால் பேப்பர் யாருக்கு பிடிக்கும்? பால்காரருக்கு தான்! | |
| நீ ஏன் தொடர்ந்து ஒரே கடையில் திருடினாய்? அந்த கடைக்கு நான் ரெகுலர் கஸ்டமர்ங்க. | |
| ேஷவிங் பண்ணும் போது எதுக்கையா நாயை கட்டிப்போடுற? இல்ல சார், அது இரத்தம்னா ரொம்ப விரும்பி சாப்பிடும் சார்...! | |
| ஹேலா கரண்ட் ஆபீஸா, கரண்ட் எப்ப சார் வரும்? தெரியலீங்க உங்க போன் நம்பரை கொடுங்க கரண்ட் வந்ததும் போன் பண்றோம். | |
| இந்தாங்க லெட்டர்! யாருட்ட இருந்து வந்துச்சு? போஸ்மேன்ட்ட இருந்துதான்...! | |
| பேசாம என் மாமா பொண்ணையே கட்டிக் கலாம்னு தோணுது! பேசாம இருக்க யாரை கட்டினா என்ன? | |
| வாஸ்து நிபுணரை கூட்டி வந்து பார்த்து பார்த்து வீடு கட்டினது த ப்பா போச்சு ஏன் சார்? பீரோவை படுக்க வைக்கணுங்கிறார். | |
| திடீரென்று செருப்புக்கடை வச்சிருக்கியே எவ்வளவு மூலதனம் போட்டே? மூலதனம் உழைப்புதான் எதிரே இருக்கிற கல்யாண மண்டபத்தில் 7 வருடம் வாச்மேனாக வேலை பார்த்தேன். | |
| பிளம்பரை ஏன் கெட்மாஸ்டர் அவசரமாவர சொல்றார்? கொஸ்டின் பேப்பர் எங்கேயா லீக் ஆகுதாம். | |
| என்ன எலுமிச்சைம்பழம் இவ்ளூண்டுதான் இருக்கு? இது எலுமிச்சைம்பழம் இல்லங்க சாத்துக்குடி...! | |
| எங்க வீடு லைப்ரரி மாதிரி அமைதியா இருக்குமா? ஊஹும், யாராவது ஏதாவது பேசிகிட்டே இருப்பாங்க. |

0 கருத்துகள்:
கருத்துரையிடுக