
ஈராக் தலைநகர் பாக் தாத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்த டெலிவிஷனில் இளைஞர்கள் சிலர் நேற்று கால் பந்து போட்டியை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர். அப்போது,அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமானது.
இச் சம்பவத்தில் ஓட்டல் இடிந்து தரை மட்டமானது. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். மேலும் 37 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. பாகிஸ்தானில் அபோதா தாபாத்தில் பதுங்கி இருந்த பின்லேடன் அமெரிக்க கமாண்டோ படையினரால் கடந்த 2-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல் கொய்தா தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஈராக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதையும் மீறி இந்த தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. எனவே இது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக