புகழ் பெற்ற ஜென் குருவை தேடி, ஒரு நாள் ஒரு இளைஞன் வந்தான். ஜென் தத்துவப்படியே அவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் தன் வாழ்க்கை சுகமாக அமைய புதுப்புது ஜென் கருத்துக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. ஆதனால் ஜென் குருவான அவரைத் தேடி வந்தான்.
அவரை வணங்கிய அவன், “குருவே! நானும் ஒரு தத்துவ மாணக்கன்தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தங்களிடம் கேட்கலாமா?” என்றான்.
“கேள்!” என்றார் ஜென் குரு.
“முதலில் உன்னை நீ நேசி அப்போதுதான் உன்னால் மற்றவர்களை நேசிக்கமுடியும். தயவு செய்து இந்த விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூறவேண்டும்! என்றான் இளைஞன்.
ஜென் குரு மெல்லப் புன்னகைத்தார்.
"நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோவமாகவோ, எதிர்ப்பாகவோ, இருக்கிறாய் என வைத்துக்கொள். அதனால் முதலில் பாதிக்கப்படுவர் யார்?” என்று கேட்டார் ஜென் குரு.
அந்த இளைஞன் சிறிது யோசித்துவிட்டு, ”முதலில் பாதிக்கப்படுவது என்றால்.. அது நானாகத்தான் இருக்க முடியும்!” என்றான்.
குரு மேலும் புன்னகைத்தார்.
”சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். அதுபோல உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும், செயல்களையும் வளர்த்துக் கொண்டால்... உன்னை நீ நேசித்தால்... உன் மீதே நீ அன்பு செலுத்தினால் அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய். ஒத்துக் கொள்கிறாயா?” என்றான் இளைஞன்.
“ஒத்துக் கொள்கிறேன் குருவே!” என்றான் இளைஞன்.
“அதுதான் உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும்” என்றார் குரு.
தெளிவான சிந்தனையுடன் அந்த இளைஞன், ஜென் குருவிடமிருந்து விடைபெற்றான்.
(நன்றி ஜென் கதைகள்)
உன்னைதான் சதோதரர்களே.. எதை விதைக்கிறோமோ அதைத்தானே அறுவடைச் செய்யமுடிமும். நாம் பிறருக்கு கொடுக்காததை நாம் அதை அவரிடமிருந்து எதிர்ப்பார்ப்பது எவ்வளவு முட்டாள் தனம். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நாம் எதையெல்லாம் பெற நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதை அக்காலத்தில் “முற்பகல் செய்வின் பிற்பகல் விளையும்” “வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான்” போன் பழமொழிகளை கொண்டு சொன்னார்கள்.
நீங்கள் ஒரு நிலைக்கண்ணாடி முன்பு நில்லுங்கள்.. இப்போது பாருங்கள் நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே அந்த பிம்பம் செய்யும்.. நீங்கள் புன்னகைத்தால் உங்கள் பிம்பம் புன்னகைக்கும்.. நீங்கள் கோவப்பட்டால் அதுவும் கோவப்படும். ஆம் இந்த உலகம் ஒரு எதிரொளிபோலதான் தாங்கள் என்ன செய்துள்ளீர்களோ அதையே உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.
நாம் வாழும் காலம் வெறும் 50, 60 ஆண்டுகள் தான் பி்ன்பு ஏன் 1000 ஆண்டுகள் வாழப்போவதுபோல் பாவணைகள்.. இருக்கும் கொஞ்சம் காலமும் நாம் அனைவரிடமும் அன்பு காட்டி அரவணைப்போம். நம் வாழ்க்கையோடு இந்த உலகமும் வசந்தமடையும்.
/// அன்பை விதைப்போம் அறுவடைகள் ஆனந்தமாய்....////
என்ன பாஸ்... எனக்கு தெரிந்த விஷயத்தை தங்களுக்கும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது சொல்லிவிட்டேன்.. இந்த உலகில் எதிர்காலம் ஆனந்தமடைய நாமும் ஒரு விதை செய்வோமே..
இந்த தளம் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.. மறக்காமல் உங்களுடைய கருத்தையும் பதிவுச்செய்யுங்கள்..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக