நியூசிலாந்தை சேர்ந்தவர் மைக்கேல் டேனியல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 28 வயது வாலிபரான இவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். சம்பவத்தன்று சமையல் அறையில் தானே உணவை சமைத்தார். சமையலுக்கு தேவையான காய்கறிகளை கத்தியால் நறுக்கினார்.
அப்போது தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவர் தனது கைவிரல் ஒன்றை வெட்டி காய்கறிகள் போன்று துண்டாக்கினார்.அதை காய்கறிகளுடன் சேர்த்து அடுப்பில் வேக வைத்து சாப்பிட்டார். இதை அறிந்த உறவினர்கள் அவரை எரிக்மோனாஸ் டீரியோவில் உள்ள கிரைக்பிரின் என்ற மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவர் மேலும் தனது 2 விரல்களை வெட்டி சமைத்து சாப்பிட திட்டமிட்டிருந்ததாக கூறினார். நல்ல வேளையாக அதற்கு முன்னதாகவே சிகிச்சை பெற்றதால் அந்த விரல்கள் தப்பின.
இந்த தகவலை மனநல நிபுணர் கிரைக்பிரின்ஸ் மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதில், உலகிலேயே முதன் முறையாக தனது உடல் உறுப்பை சாப்பிட்ட நரமாமிச மனிதர் இவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக