[ 2011-04-24 02:12:17 GMT ]
சாய்பாபா மறைவையொட்டி தனது 38-வது பிறந்தநாளை ரத்து செய்தார் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தர் சச்சின் டெண்டுல்கர். புட்டபர்த்தியில் சிறப்பு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று பாபாவின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தார்.
ஏற்கனவே சாய்பாபாவின் உடல்நிலையை பற்றி கவலையுடன் இருந்தார். பாபா உடல்நிலை சீராக பிரார்த்தனை செய்துவந்தார். தற்போது அவர் மறைந்துள்ளது சச்சின் உள்பட பாபாவின் பக்தர்கள் அனைவரையும் சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று சச்சின் தனது டுவீட்டரில் கூறியிருந்ததாவது,
Read: In English
நான் சத்ய சாய்பாபா விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் போன்று அனைவரும் பாபாவின் உடல் நிலை குணமடைய பிரார்த்தனை செய்வீர்கள். பாபா உடல்நிலை மோசமாக உள்ள இந்த நேரத்தில் எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை, என்று எழுதியிருந்தார்.
ஆனால் சாய்பாபா இன்று 24.4.2011 காலை 7.40 மணிக்கு இயற்கை எய்தினார். இது சச்சினுக்கு மிகுந்த துயரை அளித்துள்ளது. தனது பிறந்த நாளைக் கொண்டாடாத அவர், பாபா மறைவுக்கு அஞ்சலி செலுத்த புட்டபர்த்தி செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக