| இந்த பரீட்சையில பாஸ் ஆயிடுவியாடா?எதிர் பெஞ்ச் சுரேஷ், பக்கத்து பெஞ்ச் ரமேஷ் இரண்டு பேரும் ப ரஸாயிட்டா, நானும் தாம்பா...! | |
| அப்பாங்கிற மரியாதை இல்லாம, என் முன்னாலேயே தண்ணி போடறியா?நான் பின்னால தான் குடிச்சேன். நீ தான் திரும்பிட்டே. | |
| மகனிடம் தந்தை யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியா தை குறைவா பேசக்கூடாது?மகன் சரி, டா டி | |
| ஏன்டா காலேஜுக்கு போகலை?இன்னிக்கு லீவ்! உனக்கா காலேஜுக்கா? எதிர்வீட்டு பத்மாவுக்கு! | |
| தந்தை - வரலாற்றில் 0 மார்க் வாங்கி உள்ளாயே வெட்கமா இல்லையா?மகன் - அப்பா நீ தானே சொன்னாய் பழையதை மறக்கனும் என்று. | |
| பிள்ளையை புரட்டி புரட்டி அடிக்கிறாறே யார் அவர்?புத்தக வியாபாரி. | |
| ஏன் உங்க பையன் படுத்துகிட்டு சாப்பிடுகிறான்?வேலைவெட்டி போகாம உட்கார்ந்துகிட்டு சாப்பிடுறியே வெட்கமா இல்லையான்னு கேட்டேன். | |
| அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியவில்லை?எப்படியா சொல்ற... நேத்து 7+3=10 ன்னு சொன்னாரு இன்று 5+5=10 சொல்கிறார். | |
| என் பையன் நேத்து சொல்ல சொல்ல கேட்காம பூச்சி மருந்தை குடிச்சிட்டான்.அய்யய்யோ அப்புறம்? இனிமே என்னை கேட்காம கூல்ரிங்கஸ் குடிக்காதேன்னு சொல்லிட்டேன். | |
| என் பையன் செய்த காரியத்தால் என்னால் தலையை வெளியில் க ரட்ட முடியவில்லை?ஏன்? என் விக்கை அவன் எடுத்து போட்டுப் போய்விட்டான். | |
| அப்பா தன் குழந்தையிடம் என்ன புக் படிக்கிறாய் என்று கேட்டார்? அதற்கு குழந்தை குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னது.அதற்கு அதை ஏன் நீ படிக்கிறாய் என்றார்? நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களா என்று கூறியது. | |
| அப்பா - ஏண்டா மண்ணு மாதிரி இருக்க?மகன் - கற்றது கை மண் அளவு அப்பா | |
| தோல்வியை கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாய் போச்சு?ஏன்? டுட்டோரியல் காலேஜ்பீஸுக்கு பணத்தை ரெடிபண்ணி வைங்கன்னு சொல்லிவிட்டு பரீட்சைக்குப் போறான். | |
| என் பையன் பாஸ் ஆயிட்டான்இதை ஏன் கவலையா சொல்றீங்க? ஒரு திருட்டுக் கூட்டத்துக்கு பாஸ் ஆயிட்டாங்க...! | |
| என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க. செகண்ட் கிளாஸ்தான்...! | |
| திடீரென்று உங்க பையன் ஊமையாயிட்டானேஎன்னாச்சு? போன மாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு | |
| பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு இவன் பெத்தது தப்பாப்போச்சு?ஏன், என்னாச்சி? இந்த வயசுலையே என்னை பேர் சொல்லி கூப்பிடுகிறான்...! | |
| என் பையன் என் பேச்சையே கேட்க மாட்டேங்குறான்.ரொம்ப திமிரா இருக்கானா? இல்லைங்க செவிடா இருக்கான். | |
| என் பையன் பத்து காசுக்கு கூட பிரியோஜனாமில்லஏன் சோம்பேறியா? இல்லை அவனை யாரும் விலைக்கு வாங்கிக்க மாட்டேங்கிறாங்க...! |
ABUDHABI
My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.
சனி, 14 மே, 2011
அப்பா - மகன் நகைச்சுவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக